வலைப்பதிவுகளின் திரை விமர்சனம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : April 27, 2017, 2:54 pm
சூடான சினிமா இடுகைகள்இலை - சினிமா விமர்சனம்
உண்மைத்தமிழன்


The Autopsy Of Jane Doe!!!
முத்துசிவாசமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்

எப்படியாவது மாதம் ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருப்பதால், எதையாவது எழுத வேண்டி உள்ளது. "அப்படி என்னடா பெரிய சிவகாமியின் ...மேலும் வாசிக்க
எப்படியாவது மாதம் ஒரு பதிவு போட்டு விட வேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருப்பதால், எதையாவது எழுத வேண்டி உள்ளது. "அப்படி என்னடா பெரிய சிவகாமியின் சபதம், இல்ல சரசுவதி சபதமா எடுத்திருக்க, எங்கள போட்டு வதைக்க" என்று எண்ணினாலும் பரவாயில்லை.

எஸ்.பி.பி - இளையாராஜா உரிமை பிரச்சினை: 


என்னப்பா இதப்பத்தி நீ எதுவுமே சொல்லவேயில்லையே என்று யாரும் கேட்கவில்லை. என்ன எழுவதென்று தெரியாததால் இதைப் பற்றி எழுதுகிறேன். முதலில் மேடையில் பாடுவது பிடிக்காது. அதாவது அடிக்கடி ஒரு பாடலை எப்படிக் கேட்டு பழகினோமோ, அதையே கேட்பதுதான் என் பழக்கம். எனவே "நீங்கள் மேடையில் பாடுங்க, பாடாம போங்க. எனக்கு பிரச்சினையே இல்ல" என்பதுதான் என் கருத்து.

ஆனால், பாலு எனக்கு இந்த காப்பிரைட் பற்றியெல்லாம் தெரியாது என்று சொன்னதுதான் எனக்கே (?) கோபம் வந்தது.சில ஆண்டுகளுக்கு முன், இவர் தலைமையில் பாடகர்கள் அனைவரும் "எங்களுக்கும் ராயல்டியில் பங்குண்டு" என்று பேட்டி எல்லாம் கொடுத்தார். அது மட்டும்தான் உறுத்தல். மற்றபடி இளையராஜா கொஞ்சம் பேசியிருக்கலாம்.

கவண்:

விமர்சனங்கள் இருக்கவே, சரி என திரையரங்கம் சென்று பார்த்தேன். கொஞ்சம் அங்கங்கே இழுவையாக இருந்தாலும், ஒரு முறை பார்க்கலாம். படம் முடிந்த பின்புதான் "எப்படிடா இப்படி எல்லாம் பண்ண முடியும்" என்று தோன்றியது.

பாகுபலி 2:

பயப்படாதீங்க. சத்தியமா இன்னும் பாக்கல. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாருன்னு எனக்கு தோன்றத சொல்றேன். எனக்கு தெரிஞ்சு ஏதோ ஒரு உள்குத்து செஞ்சு ராணா ராஜா ஆகுறாரு. அதுக்கு அப்புறமா, பிரபாஸ் வெளிய போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குறாரு.

ஒரு கட்டத்துல ராணாவோட கொடும தாங்காம மக்கள் பிரபாஸ்கிட்ட சொல்றாங்க. போர் நடக்குது. பிரபாஸ் ஜெயிக்கிற மாதிரி இருக்காரு. ராணாவாக கொல்லப் பாக்குறாரு. ராணாதான் மன்னர், அவர காப்பாத்தணும்னுதான் கட்டப்பா அவரக் கொல்றாரு. அதே நேரம் அனுஷ்காவுக்கு கொழந்த பொறக்குது. மீதிக்கதை உங்களுக்கே தெரியும். 

அடிக்கடிக்கடி (தப்பால்லாம் அடிக்கல) படம் பாக்குற யாரா இருந்தாலும், இதேதான் தோணும். பாப்போம்.

இப்போதெல்லாம் பெரியதாக எழுதுவது என்பது குறைந்து விட்டது. பல பதிவர்கள் எல்லாம் எழுதுவதை விட்டு விட்டு, காணொளி மூலம் வருகிறார்கள். இல்லையெனில், கீச்சுக்களிலும், முகப்புத்தங்களிலும்தான் எழுதுகிறார்கள். ஒரு கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது எப்படி குறைந்ததோ, அதே போல பதிவுகளும், பதிவர்களும், குறிப்பாக அதைப் படிப்பவர்களும் குறைந்து வருகிறார்கள்.

இது முழுக்க முழுக்க என் கருத்துதான். ஏனென்றால், எனக்கே கொஞ்சம் பதிவிடுவதற்கான ஆர்வம், நேரம் எல்லாமே குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் நாட்குறிப்பு எழுதி வந்தேன். இதே போன்ற சூழ்நிலையில்தான் அதை நிறுத்தினேன். அது போலவே ஆகி விடுமோ என்ற பயம் உள்ளது. எனவேதான் எப்பாடு பட்டாவது (அல்லது படுத்தியாவது) மாதம் ஒரு பதிவிடுகிறேன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...மேலும் வாசிக்கஎழுத்துப் படிகள் - 197 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவகுமார்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.    எழுத்துப் படிகள் - 197  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ஆயிரம் முத்தங்கள்                 

2.    குமாஸ்தாவின் மகள்         

3.    யாரோ எழுதிய கவிதை             

4.    ராமன் அப்துல்லா            

5.    சஷ்டி விரதம்            

6.    காவல்காரன் 

7.    அம்மா இருக்கா    
     

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...மேலும் வாசிக்கசொல் வரிசை - 168  புதிருக்காக, கீழே  எட்டு (8)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   1.    ராமு (---  ---  ---  நீ நினைக்கும் இடத்தில் நானில்லை)
  
2.    என்றென்றும் புன்னகை(---  ---  ---  ---  --- நான் என்ன நான் என்ன பண்ண) 

3.    பெரியண்ணா(---  ---  ---  --- என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு) 

4.    புதிய வார்ப்புகள் (---  ---  ---  --- நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை)  

5.    தை பொறந்தாச்சு (---  ---  ---  --- பாட்டொன்று பாட போறேன்

6.    தாமிரபரணி (---  ---  ---  ஒண்ணு கொல்லப் பாக்குதே)

7.    மக்களை பெற்ற மகராசி(---  ---  ---  ---  உண்மை காதல் மாறி போகுமா

8.    புதிய வாழ்க்கை (---  ---  ---  பேதை மனமே பேசு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள்,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்  ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தஞ்சாவூர்க் கவிராயர் என்பவர் , தமிழ் இந்துவின் ...மேலும் வாசிக்க

தஞ்சாவூர்க் கவிராயர் என்பவர் , தமிழ் இந்துவின் நடுப்பக்கத்தில் வாரமொருமுறை தம் பசுமையான நினைவுகளை எளிமையான வார்த்தைகளால் பகிர்ந்து வருகிறார் . சென்றவாரத்தில் உறவுகளையும் , தின்பண்டங்களையும் இணைத்து நினைவுகூர்ந்திருந்தார் . இருபத்தைந்து வயதினைக் கடந்த எலோருக்குமே மேற்படி அனுபவம் இருந்திருக்கும், நம் வீட்டிற்கு வந்த  ஒவ்வொரு உறவினருக்கும் ஓர் ஆஸ்த்தான தின்பண்டம் இருக்கும் . நமக்காக அதை அவர்கள் எடுத்து வரும் விதமும் பண்டத்தின் மணமும் இன்றளவும் அவர்களை நினைவுகூரவைக்கும் .


தாய் வழி பெரியம்மா என்னை பார்க்க வரும்போதெல்லாம் பொறி உருண்டை கொண்டு வருவார் . இரண்டு கைகளை சேர்த்து பிடித்தாலும் , பிதுங்கி நிக்கும் சைசில் இருக்கும் ஒவ்வொன்றும். மொறு மொறுவென்று கடிக்கும் போது இருக்கும் சுவையை காட்டிலும் , கடைசியில் சில கடிகளை அப்படியே வாயில் சற்று ஊற வைத்து சாப்பிடுவது அலாதியான சுவையை தரும்.

அப்பா எப்பொழுதும் விரும்பி வாங்கி வருவது இனிப்புக் காராசேவ். கசங்கிப்போன தினத்தந்தி பேப்பரில் பொட்டலம் கட்டி , ராஜ்கிரண் டைப் அண்டர்வேருக்குள் வைத்து அப்பா எடுத்து வரும் இனிப்பு காராசேவ்க்கு தனி ருசி .

தந்தை வழி பெரியம்மா சத்துணவுக்கூடத்தில் வேலைபார்த்தமையால் ஒவ்வொருமுறை வருகையின்போதும் அரசு சத்துமாவு பாக்கெட் ஒன்றோ இரண்டோ எடுத்துவருவார் . வெந்நீர் ஊற்றி பிசைந்து ஒரு நாளைக்கு ஓர் உருண்டையாக அம்மா தருவார் . என்னதான் உருண்டு, புரண்டாலும் இரண்டாவது உருண்டை கிடைக்காது. மேற்படி சத்துணவு உருண்டையில் உச்சபட்ச ருசியே அங்கங்கே சிதறி இருக்கும் சர்க்கரை கட்டி தான் . மாவு மட்டும் முதலில் கரைந்து இடையிடயே சர்க்கரை கட்டி மட்டும் தனியாக உமிழ்நீரில் சங்கமிக்கும்போது ருசியில் நாமும் கரைந்தே போவோம்.

அம்மாவின் ஆஸ்தானம் சீடைக்காயும், தேன்குழலும் . சீடைக்காயில் கலந்திருக்கும் தேங்காயின் ருசியை இப்பொழுதும் என்னால் நினைவுகூர்ந்து ருசிக்க முடிகின்றது. அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்தபோது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஒரு டின் நிறைய சீடைக்காயும், தேன்குழலும் கொடுத்தனுப்புவார் அம்மா. விரைவில் தீர்ந்துவிடக்கூடாது என்பதற்காக வேளைக்கு பத்து என்று எண்ணி எண்ணி தின்றிருக்கிறேன். சமயங்களில் பக்கத்துப் பையன் கேட்டுவிடக்கூடாதே என்று சத்தம் வராமல் வாயில் ஊறவைத்து தின்றதை எல்லாம் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அடுத்து தேன்குழல் . தேன்குழலின் சிறப்பே அதன் டிசைன்தான். ஒவ்வொன்றாக ஒடித்து ஒடித்து சாப்பிடுவது கிட்டதட்ட ஓவியம் வரைவது போலதான் . ஆயுள் சொற்பம்தான் எனினும் தேன்குழலில் பச்சை தேன்குழல் வெகு ருசியாக இருக்கும் . பச்சை தேன்குழல் என்பது ஆஃப்பாயில் போன்றது . அதாவது அரைவேக்காட்டில் எடுப்பது .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வியாபாரத்தில் நம்மாட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு . அதாவது போன ரூட்லையே போறது . ஒருத்தன் வடை சுட்டு வியாபரம் பண்ணி நாலு காசு சேர்த்தா , உடனே நாங்களும் வடை சுடுறோம்னு எதிர்லயே கடை போட்டு எதிர்த்த கடைக்காரன் தலையில் துண்டை போட்டுவிடுவோம். பத்தாதற்கு நாமும் கையை சுட்டுக்குவோம். பரீட்சார்த்த முயற்சி என்பது தமிழகத்தில் வெகு சொற்பம் . ஊரோடு ஒத்து வாழ்ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி கிணத்துத் தவளையாகவே இருக்கிறோமோ என்றொரு எண்ணம் எனக்குண்டு. விதியாசப்படுத்திக்காட்டுவதில் நமக்கு நம்பிக்கையும் இல்லை அக்கறையுமில்லை. நம்முடைய வித்தியாசமெல்லாம் தமிழ்சினிமா இயக்குனர்கள் , தங்களது பட ரிலீசின் போது ஊடகத்திற்கு சொல்லும் ஒப்பனை வார்த்தைகள் போலத்தான்.

விளம்பரங்கள் கூட அப்படித்தான் . சாரதி வேஷ்டிக்கு அப்புறம் வேஷ்டிக்காக பெரிதாக எந்தவொரு விளம்பரத்தையும் கேட்டதாகவோ, பார்த்ததாகவோ , படித்ததாகவோ நினைவில்லை . சில வருடங்களுக்கு முன்பு வேஷ்டி விளம்பரம் எல்லாம் காசைக் கரியாக்குகிற செயலாகத்தான் பார்க்கப்பட்டது. காரணம் , ஆண்கள் வேஷ்டிகளைத் துறந்து பேன்ட், ஜீன்ஸ் என்று மாறிவிட்டதும், வேஷ்டிகட்ட மறந்துவிட்டதுமே. இந்நிலையில்தான் ராம்ராஜ் நிறுவனத்தினர் வேஷ்டி விளம்பரத்தை கையிலெடுத்து , தொடர்ந்து விளம்பரங்களை காட்டி,  ஆண்கள் கவனத்தை வேஷ்டிகளின் பக்கம் இழுத்தார்கள். விளம்பரங்கள் மட்டுமல்லாது புராடக்ட்களிலும் , சப்ளை செயினிலும் புதுமைகளை புகுத்தி ஆடைத்துறையில் வெண்மைப் புரட்சியை அமர்க்களமாக சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் .  புதிதாக எதையும் உருவாக்கவில்லை; மீட்டுருவாக்கம் தான் . ஆனால் துணிந்து இறங்கி , சின்ன சின்ன வித்யாசங்களை புகுத்தி இன்று ஒரு பெரிய சந்தையையே உருவாக்கிவிட்டார்கள் . இப்பொழுது நம் வடை பார்ட்டிகளுக்கு கண்களில் வேர்வை கட்டி அடுத்தடுத்து களமிறங்கிவிட்டார்கள். போட்டி நல்லதுதான் , இருப்பினும் ஏதேனும் ஒருவகையில் ஏற்கனவே இருப்பதை விட சிறப்பாக இருக்கவேண்டுமல்லவா 

சமீபத்தில் நான் ஆச்சர்யபட்டு பார்த்த இரண்டு விளம்பரங்கள் & புராடேக்ட்கள் ஒன்று இன்னோவேடிவ் வகையறா மற்றொன்று மீட்டுருவாக்கம் வகையறா. 

இன்னோவேடிவ் புரோடேக்ட் : கம்ஃபோர்ட் பேப்ரிக் கண்டிஷனர்.

எனக்குத் தெரிந்து டெட்டாலைத்தான் நாம் வெகுநாட்களாக பேப்ரிக் கண்டிஷனராக உபயோகித்துக் கொண்டிருந்தோம் . அதுவும் மாமாங்கத்திற்கு ஒருமுறை. அதாவது போர்வை, ஜமுக்காளம் துவைக்கும்போது மட்டும். மற்றபடி சவுக்கார கட்டியை வைத்து ரெண்டு தோய் தோய்த்து நாலு கும்மு கும்மி காயப்போடுவதோடு சரி . திடீரென பேப்ரிக் கண்டிஷனர் என்ற ஒன்றை விளம்பரப்படுத்தி இன்று சந்தையை துவைத்துப்  பிடித்துவிட்டார்கள். இன்றுவரை கம்போர்ட்டிற்கு போட்டியாக  வேறு எந்த பிராண்டும் வராதது ஆச்சர்யம். கோடிக்கணக்கில் மதிப்பிடப்படும் சந்தையை மோனோபோலியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.


மீட்டுருவாக்கம் : aer  டாய்லட் ப்ரெஷ்னர்.

சாம்பிராணி , ஊதுவத்தியைத்தான் சில இடங்களில் இன்றும் அறை மணப்பானாக உபயோகித்துக்கொன்டு இருக்கிறார்கள். சிறுவயதில் வீட்டில் அந்துருண்டையை போட்டுவைப்பார்கள் . அப்பொழுதெல்லாம் ஒதுங்குவதற்கு காடு கரைதான் . கிணற்றடியில், அலமாரியில் இங்கெல்லாம் நாப்தலின் என்ற வண்ண வண்ண அந்துருண்டையைத்தான் போட்டு வைத்திருப்பார்கள் . கொஞ்ச நாட்கள் கழித்து ஓடோனில் என்றொரு பிராண்ட் வந்து அந்துருண்டையை உருட்டிவிட்டு அதன் இடத்தை பிடித்துக்கொண்டது . மிகச்சமீபம் வரைக்கும் ஓடோனில் தான் கழிவறைகளின் மணக்கும் நண்பன்.

அதிரடியாக சமீபத்தில் உள்ளே நுழைந்தார்கள் கோத்ரேஜ் கம்பெனிக்காரர்கள். அதே டாய்லட்/ரூம் ப்ரெஷ்னர் தான் . ஆனால் வடிவமைப்பில் , பேக்கேஜிங்க்கில் , விளம்பரத்தில் என்று அனைத்து விசயங்களிலும் ஸ்டைலை புகுத்தி சந்தையை பிடித்துவிட்டார்கள் . வழமையான பேக்கேஜிங் மற்றும் மணத்தை தவிர்த்து ஸ்லீக்கான ஸ்டைலான புதுவிதமான நறுமணத்துடன் வந்த aer பாக்கெட்டை மக்கள் உடனே சுவீகரித்துக்கொன்டார்கள் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கட்டப்பாவ காணோம் 
வரும் ஆனா வராது மாதிரியான படம் . கண்டிப்பா தோத்துடுவானுங்கன்னு முடிவு பண்ணி டி,வியை ஆஃப் பண்ணப்போகும்போதுதான் பவுண்டரியை அடிச்சு நம்பிக்கையை விதைப்பார்கள் அதைப்போலத்தான் க.காவும் . கோடை உக்கிரமாய் சிபி ; உக்கிரத்தை ஓரளவு ஈடுகட்டும் தர்பூசாய் ஐஸ்வர்யா ராஜேஷ். சிபியை மட்டும் சகித்துக்கொண்டால் பார்க்காலாம் டைப் படம்தான் . ஆங்காங்கே வரும் குறியீடுகளும், வசனங்களும் குறிப்பாக கிரிக்கெட் பார்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும் வசனங்களும் “ஏ”ஒன் ரகம். இருப்பினும் விரசமில்லை .  கள்ளச்சிரிப்புகளுடன் கடந்துவிடலாம்.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் காலியானபிறகு , அவ்வளவுதான்னு நினைச்சுட்டு இருக்கும்போது நினச்சுப்பார்க்காத வகையில் டெயிலண்டர்கள் காட்டு காட்டென்று காட்டுவார்களே அதைப்போலவே காளிவெங்கட், மைம் கோபி , யோகிபாபு , டாடி சரவணன்னு பொளந்துகட்டுகிறார்கள் . காளிவெங்கட்டிற்காகவே இனி படம் பார்க்கலாம் போல . எனக்கு வாய்த்த அடிமைகளிலும் செம்மையான பெர்பார்மென்ஸ் மேற்படி க.காவிலும் தொடர்கிறது. குறிப்பாக ஷேர் ஆட்டோவில் பல்பு வாங்கும் போது காட்டும் உடல்மொழியெல்லாம் அபாரம் . உடல் மொழியோடு டயலாக் டெலிவரிகளும் நல்லா blend ஆவது சிறப்பு .

யோகிபாபுவின் ஓப்பனிங் என்ட்ரி சீனும் ,  தொடர்ந்து வரும் பி.ஜி.எம்மும் அதிரி புதிரி ரகம். தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் வாளி வாங்கும் காட்சிகள் கலகலப்பு . தள்ளுவண்டிக்கார அம்மிணியின் தண்ணி வண்டிக்காரக் கணவர் பேசும் “சொல்மீ” , “ப்ரோ” எல்லாம் அல்டிமேட் அல்டிமேட் ...! யோகியின் அசிஸ்டென்ட்டாக வரும் அந்த பங் வைத்த பையன் ஓட்டை வாளியில் மீனை வைத்துக்கொண்டு ஓடிவரும் காட்சி காமெடி ஹைக்கூ . லிவிங்க்ஸ்டன் , பெரிசு அப்புறம் அந்த களவாணி பட வில்லன் எல்லாருமே கச்சிதம். சேது மட்டும் ஏன் டல்லாவே வர்றாருன்னு தெரியல .மேஜிக் பண்றவங்கல்லாம் பொதுவா எந்த்தோவோட தானே இருப்பாங்க வைப்ரேஷனே இல்லாம சைலண்டா பொம்மை மாதிரி வர்றாரு , பேசுறாரு போறாரு .

“கண்களில் சுற்றும் கனவுகளை கைகளில் பிடிக்க வழி இருக்கா” பாடல் , அதன் வரிகளாலும் , சத்யப்பிரகாசின் குரல்களாலும் செவிஈர்க்கிறது. சிபி, ஐஸ்சின் அன்னியோன்யமான காட்சிகளும் , குட்டிக் குழந்தையின் பிஷ் ஸ்டெப்ஸ் நடனமும் பார்வைப்பரவசம் .

கலகலப்பு படத்திற்கு அப்புறமா நிறைய இடங்களில் சிரிச்சு பார்த்த படம் கட்டப்பாவ காணோம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்காக, கன்னட இனவெறி கிறுக்குகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். 9 வருடங்களுக்கு ...மேலும் வாசிக்க

நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்காக, கன்னட இனவெறி கிறுக்குகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்த சத்யராஜ் தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லையென்றும் கூறியுள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் பேசிய பேச்சுக்காக இப்போது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் இறங்குகிறவர்கள் எந்த இலட்சணத்தில் இருப்பார்கள் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளில் போராடியிருப்பார்கள் என்று நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இப்போது சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததற்காக அவரை எல்லாரும் பாராட்டுகிறார்கள். அவர் தமிழனை விட்டுக் கொடுக்கவில்லை. படத்தில் பணியாற்றிய ஆயிரம் குடும்பங்களுக்காகத்தான் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவர் இனமுரசு, பெரியாரியர், பகுத்தறிவுவாதி, தமிழ் உணர்வாளர் என்கின்றனர். ஏன் வருத்தம் தெரிவித்து விட்டு தமிழனாக இருப்பதே இறப்பதே பெருமை என்று சொல்லி விட்டார். என்னென்ன அட்டூழியம் செய்தாலும் செய்து முடித்து விட்டு பாரத் மாத்தா கீ ஜே என்று சொல்கிறவர்கள் தேசபக்தனாவதைப் போலத்தான் இதுவும் இருக்கிறது. தமிழனாக இருப்பதே தமிழன் என்பதே அவருடைய நிலையை நிர்ணயித்து விடுகிறது தமிழ்நாட்டில்.


இதே போல் நடிகர் ரஜினியின் படத்திற்கு பிரச்சனை வந்த போது ரஜினி வருத்தம் தெரிவித்தார். தான் கன்னட மக்களைக் குறிப்பிடவில்லை என்றும், வன்முறை செய்தவர்களைத்தான் உதைக்க வேண்டும் என்று கூறினேன் என்று கூறினார். ஏன் சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தில் மட்டுமா ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது. ரஜினியின் படத்திலும்தானே இருந்தார்கள். இத்தனைக்கும் சத்யராஜ் பக்க கதாபாத்திரம் மட்டுமே. ரஜினியின் படம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. எனவே சத்யராஜின் பிரச்சனையை விட ரஜினிக்குத்தான் அழுத்தம் அதிகம். அவர் கேட்க விரும்பாவிட்டாலும், திரையரங்க அதிபர்கள், சங்கத் தலைவர்கள், விநியோகிப்பாளர்கள், படத் தயாரிப்பாளர், துணை நடிகர்கள் மற்றும் திரைப்படத்திற்குப் பின்னால் வேலை செய்த அனைவரின் வாழ்க்கைக்கும் சேர்த்துத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார். என்ன ரஜினி கன்னடனாகப் போனதால் அவரைத் திட்டுவதற்கு அருமையான காரணம் கிடைத்து விட்டது.  அவரை எதிர்த்தவர்கள் கன்னட அமைப்பினர் என்றபோதும் அவரது படத்தை வாங்கி ஓட்டும் திரையரங்கு முதலாளிகள் கன்னடர்கள்தானே, அவர்களுக்கு மட்டும் கன்னட உணர்வு இல்லையா ?

ரஜினி படத்தை வெளியிடுகிறவர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் எனப் பெரும்பான்மைத் தமிழர்களின் குடும்ப வாழ்வும்தானே ரஜினியின் படத்தில் இருக்கிறது. அதற்குத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார் என்றால் ஒத்துக் கொள்வார்களா ? இப்போது சத்யராஜ் மற்றவர்களுக்காகத்தான் மன்னிப்புக் கேட்டார் என்பவர்கள்.

நான் தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனைக்குக் குரல் கொடுப்பேன், என்னால் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று சத்யராஜ் சொன்னது வீரம்தான் நேர்மைதான் என்று ஒத்துக் கொள்கிறேன். அதை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினி வருத்தம் தெரிவித்த போது இந்த சத்யராஜ் என்ன சொன்னார் ? நானாக இருந்தால் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன், எனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருப்பேன். இப்போது இவரும் மன்னிப்புதானே கேட்டிருக்கிறார் ? என்னவோ ரஜினி மன்னிப்புக் கேட்டதை வைத்து தமிழ்நாட்டின் தன்மானமே அடகுவைக்கப்பட்டதைப் போலல்லவா பேசினார். ரஜினிக்கு இதுமாதிரியெல்லாம் வாயடிக்கத் தெரியாது. உளறி மாட்டிக் கொள்வதால் ரஜினியைப் போட்டு கும்மிவிட முடிகிறது.

உண்மை என்ன. சத்யராஜ்-க்கு ரஜினியைப் பிடிக்காது, அதனால்தான் அன்று கன்னட இனவெறியைக் கண்டிப்பது போல் இவரைத் திட்டினார். பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் சத்யராஜ் தன்னை நடிகன் எம்ஜிஆரின் ரசிகன் என்பதில் பெருமைப்படுவார். அதெப்படி ஒரு பகுத்தறிவுவாதி ஒரு நடிகனுக்கு ரசிகன் என்பதைப் பெருமையாகச் சொல்வார் ? அதிலும் எம்ஜிஆரைக் குறிப்பிடும்போது புரட்சித் தலைவர் என்றுதான் குறிப்பிடுவார். அவர் என்ன புரட்சிக்குத் தலைமை வகித்தார் என்று யாராவது சொல்லுங்களேன். சரி அதாவது போகட்டும். தனது படங்களில் மக்கள் நடிகனுக்கு கொடி பிடிப்பதையும், தலைவனாக்குவதையும் விமர்சனம் செய்வார். கிண்டலடிப்பார். ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்று ஒரு விழா நடத்தினார். தனது கொடியை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு பதினாறு பல்லையும் காட்டினார். தனது படத்தில் மக்களைக் கிண்டலடித்து நடிகனைத் தலைவனாக்காதே என்று சொல்லி விட்டு ஒரு நடிகனைத் தலைவனாக சித்தரித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எப்படி இன முரசு ஆக முடியும் ?

எனக்கு எம்ஜிஆருக்கு அப்பறம் விஜய்தாங்க என்பார். இவருக்கு பிடித்த நடிகர் எம்ஜிஆர் பிறகு விஜய் ஆம். அதாவது மறைமுகமாக எம் ஜிஆருக்குப் பின்னர் விஜய்தான். நடுவில் இருக்கும் ரஜினி ஒர் ஆளே இல்லையாம். ரஜியின் பஞ்ச் வசனங்களை அதிகமாக கிண்டலடிப்பார் சத்யராஜ். பெரியார் பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டேண்டா என்று கேட்டார். பெரியாரியவாதி சத்யராஜ் தங்கநகை விளம்பரத்தில் நடிக்கிறார். சின்ன வேறுபாடுதான்.
http://feeds.feedburner.com/ blogspot/QVKqs

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  மலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ ...மேலும் வாசிக்க

  மலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ அதிகம் எடுபடுவதில்லை. ஆனாலும் வருடம் முழுவதும் தரமான படங்களை அசாதாரணமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சேட்டன்மார்கள். கம்மட்டிப்பாடம், பத்தேமாரி, அனுராக கரிக்கான் வெள்ளம், கிஸ்மத், அங்கமலி டைரீஸ் இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் வெளியாகி, விமர்சகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்த திரைப்படங்கள். இந்த படங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம், […]

The post சகாவு – திரை விமர்சனம். appeared first on மாற்று.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...மேலும் வாசிக்கசொல் அந்தாதி - 79  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்கொடுக்கப்பட்டுள்ளன.1.  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - அமுத தமிழில் 

2.  நீ ஒரு மகாராணி 

3.  தீபம்  

4.  கண்ணுக்குள் நிலவு       

5.  கண் சிமிட்டும் நேரம்     

                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பவர் பாண்டி இயக்குனராக தனுஷின் முதல் படம்...(தங்க மகன் கூட அன் அபிஷியல் ஆக தனுஷ் இயக்கியதாக கேள்வி.. இப்படத்தின் படமாக்கத்தில் தங்க மகன் சாயல் தெரியவே செய்கிறது ...மேலும் வாசிக்க
பவர் பாண்டி இயக்குனராக தனுஷின் முதல் படம்...(தங்க மகன் கூட அன் அபிஷியல் ஆக தனுஷ் இயக்கியதாக கேள்வி.. இப்படத்தின் படமாக்கத்தில் தங்க மகன் சாயல் தெரியவே செய்கிறது ) வயதான பெற்றோரை மதியுங்கள்; நம்ம அம்மா தானே; அப்பா தானே என அவர்களின் உணர்வுகளையும், பேச்சையும் அலட்சியம் செய்யாதீர்கள் என்கிற கருவை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் தனுஷ். கதையின் கரு  மற்றும் கடைசி 30 நிமிடம் நிச்சயம் அருமை; ஆனால்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


22-04-2017 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ...மேலும் வாசிக்க
22-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை லீஃப்  புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் பினிஷ் ராஜ் இயக்கியுள்ளார்.
இதில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம்.  காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல்,  இசை – விஷ்ணு வி.திவாகரன்,  வசனம் – ஆர்.வேலுமணி, கலை – ஜைபின்  ஜெஸ்மஸ், படத் தொகுப்பு – டிஜோ ஜோசப்,  நிர்வாகத் தயாரிப்பு – ஷோபன் குமார், தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன். தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ்  இண்டர் நேஷனல். 

நம் நாட்டில் எல்லாப் போட்டிகளிலும் ஆண்கள் சாதாரண ஓட்டமே  ஓடுகிறார்கள். ஆனால் பெண்கள் பல தடைகளைத் தாண்டித்தான் ஒட வேண்டியிருக்கிறது. ஒரு துறை என்றில்லை… பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு  தடைகளை, இடையூறுகளை, இடர்ப்பாடுகளைத் தாண்டித்தான் மேலே வர வேண்டியிருக்கிறது.
அதேசமயம் சமீப காலங்களில்  பள்ளித் தேர்வுகளில் பெண்களே எப்போதும் அதிக மதிப்பெண்களை பெறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அதைச் சாதிக்க அவர்கள் படும்பாடு, சந்திக்கும் வலிகள் யாருக்கும் தெரிவதில்லை.
அப்படி ஒரு பெண் கல்வியில் சாதிக்கத் துடித்து அதற்காக தனக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தாண்டி, எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து ஜெயிக்கிறாள் என்பதைச் சொல்லும் படம்தான்  இந்த ‘இலை’ திரைப்படம்.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் திருநெல்லி என்னும் கிராமம்தான் படத்தின் கதைக் களம். ஊர் முழுவதும் விவசாயம்தான். பெண்கள் அதிகமாக படித்ததில்லை. படிக்க வைக்கப்பட்டதுமில்லை.
ஹீரோயினான ‘இலை’ என்னும் ஸ்வாதி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது அப்பாவான ‘கிங்’ மோகன், தனது மகள் ‘இலை’ படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ‘இலை’யின் அம்மா இதை எதிர்க்கிறார். சீக்கிரமாக ‘இலை’யை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
‘இலை’க்கு பின்பு எட்டு வயதில் ஒரு பையனும், கைக்குழந்தையும் இருப்பதால் வீட்டு வேலைகளைக் கவனிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார் ‘இலை’யின் தாய். இந்தச் சூழலில் அக்கம் பக்கத்தினர், சொந்த அம்மா, மாமா என்று பலரது எதிர்ப்புகளையும் மீறி படித்து வருகிறார் ‘இலை’.
இந்த நிலையில் ஊர்ப் பண்ணையாரின் மகளும், ‘இலை’யும் ஒரே வகுப்பில்தான் படித்து வருகிறார்கள். பண்ணையாரின் மகளுக்கு படிப்பு ஏறவில்லை. இதனால் ‘இலை’ மீது வன்முத்துடன் இருக்கிறாள் பண்ணையாரின் மகள். தனது மகளின் கோபத்தை அறிந்த பண்ணையார், ‘இலை’யை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் தடுக்க ஒரு திட்டம் தீட்டுகிறார்.
இதன்படி ஒரு விடியற்காலை பொழுதில் வயல்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் ‘இலை’யின் அப்பாவை மனநோயாளியான தனது தம்பியை வைத்து கடுமையாகத் தாக்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் பண்ணையார். இதனால் கடைசி பரீட்சையான சமூக அறிவியல் தேர்வுக்கு எழுத செல்ல முடியாத நிலைமை ‘இலை’க்கு ஏற்படுகிறது.
ஒரு பக்கம் பால் கறந்து கடைக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். கைக்குழந்தையை கவனிக்க வேண்டும். தம்பிக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்க வேண்டும்.. கோழிகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும். அவைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.. இப்படி ஒரு கிராமத்து வீட்டில் என்னென்ன வேலைகள் இருக்குமோ அது அத்தனையையும் இப்போது ‘இலை’ செய்தாக வேண்டிய கட்டாயம்..!
படிப்பா..? வீடா..? என்கிற பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறாள் ‘இலை’. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம்.
‘இலை’யாக நடித்திருக்கும் ஸ்வாதிதான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நிஜத்தில் கல்லூரி படிப்பை முடித்து ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவிக்கான கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரளத்தின் அழகு முகத்திலும், நடிப்பு அனைத்து அவயங்களிலும் தென்படுகிறது.
கடைசி பரீட்சை நாளன்று அவர் படும்பாடுதான் மொத்தப் படமே..! அந்த நாளில் அடுத்தடுத்து வரும் சோதனைகளைத் தாண்டிக் கொண்டு அவர் ஓடும் ஓட்டமும், நடிப்பும் ‘பாவம்டா சாமி’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
‘இப்படியொரு பொண்ணுக்கு ஏண்டா இப்படியொரு சோதனை’ என்று கடவுளை நிந்திக்க வைத்திருக்கிறது இடைவேளைக்கு பின்னான காட்சிகள் அனைத்தும்..! அப்படியொரு நடிப்பை காட்டியிருக்கிறார் ஸ்வாதி. குச்சுப்புடி டான்ஸரும்கூட என்பதால் நடிப்பு சொல்லித் தர தேவையில்லை. 
வெற்று காலுடன் வயக்காடு, மேடு, பள்ளம், காடு, பாறை என்று அனைத்து இடங்களையும் ரவுண்ட்டித்தது போல அவர் ஓடும் ஓட்டமும், படும்பாடும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்திருக்கிறது.
இவருக்கு பின்பு ஸ்கோர் செய்திருப்பவர் இவருடைய அம்மாவாக நடித்திருப்பவர்தான். வீட்டில் தனக்கிருக்கும் வேலைகளுக்காகவே மகளின் படிப்பை பாதியில் நிறுத்த எண்ணும் அவரது நோக்கத்தை இன்னொரு பக்கம் பார்த்தால் சரியென்றுதான் சொல்லத் தோன்றும். பெரிய மகள் பத்தாம் வகுப்பு படிக்க.. கைக்குழந்தையுடன் அவர் படும் அவஸ்தைக்கு ஸ்வாதியின் அப்பாவும் ஒரு காரணம்தானே..? இந்த வகையில் பார்த்தால் படம் இரு தரப்பு வாதங்களையுமே எடுத்துரைக்கிறது.
ஸ்வாதி அன்றைய நாளின் பரபரப்பு அலைச்சல்களுக்கிடையே “ஐயோ.. இத்தனை வேலையா..? இத்தனை நாளா அம்மா எப்படி ஒத்தை ஆளா இதைச் செஞ்சாங்க…?” என்று அவரே தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் அந்த ஒரு வசனமும் படத்தில் மிக, மிக முக்கியமானது.
ஸ்வாதியின் தம்பியாக நடித்த பையன், அப்பாவாக நடித்தவர்.. தாய் மாமனாக நடித்த சுஜீத், பழங்காலத்து பண்ணையாரை ஞாபகப்படுத்திய நடிகர்.. இவர்களுடன் நடிப்பில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த மலையாள நடிகையான கனகதாராவும் தனது சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் இருக்கும் நாயகியான ‘இலை’ என்னும் ஸ்வாதிக்கு அந்த வயதுக்கேற்ற அறிவும், பக்குவம் மட்டுமே இருப்பதால், அவர் செய்ததெல்லாம் சரியே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!
ஸ்வாதியின் வீட்டில் நடக்கும் அந்த அமங்கலம் எதிர்பாராதது.. நாம் ஒன்றை எதிர்பார்க்க அங்கே வேறொன்றை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் நாட்டு குண்டு சின்னப் பெண்ணின் கையில் கிடைப்பதும்.. பட்டப் பகலில் சிம்னி விளக்கு எரிவது என்பதெல்லாம் நம்மை ஏமாற்றும் திரைக்கதை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும்தான் கதைக் களன் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை மிக எளிதாகிவிட்டது. ஷாட் பை ஷாட் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளையே படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு பாராட்டுக்கள்..!
பாடல்கள் கேட்கும் ரகம். அதே சமயம் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகப்படியானதைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.  ஒலியைக் குறைத்திருக்கலாம்.
இடைவேளைக்கு பின்பு கைக்குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஸ்வாதி ஊருக்குள் ஓடி, ஓடி வரும் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இந்தக் காட்சிகளில் நிறையவே எடிட் செய்து அதற்குப் பதிலாக கூடுதல் காட்சிகளை கிரியேட் செய்து வைத்திருந்தால் படத்தின் கதைக்கு இன்னமும் கூடுதல் வலு சேர்த்திருக்கும். அந்தக் காட்சிகள் ஓரளவுக்கு மேல் திகட்டிவிட்டன..!
கணவரையும் இழந்துவிட்ட நிலையில் தனது மகளையாவது படிக்க வைத்து கணவரின் விருப்பதை நிறைவேற்ற அந்தத் தாய் எடுக்கும் முடிவுதான் படத்தின் ஹைலைட்.  இதுதான் படம் சொல்லும் நீதி..!
எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய… இன்றைய இந்தியச் சமூகத்திற்கு அத்தியாவசியமான கதையாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், சினிமா ரசிகர்கள், விரும்பிகள் அனைவரும் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்..!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மனதில் நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒரு பயத்தை உண்டாக்கும் இடங்களில் முக்கியமான ஒரு இடம் பிணவறை.. ...மேலும் வாசிக்க
மனதில் நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒரு பயத்தை உண்டாக்கும் இடங்களில் முக்கியமான ஒரு இடம் பிணவறை.. பெரும்பாலானோருக்கு நிச்சயம் பரிட்சையமான இடமாக இருக்காது. குறிப்பாக பெண்களுக்கு. நமக்கு நெருங்கியவர்களின் துர்மரணங்கள் நிகழும்போது மட்டுமே, அந்த இடத்திற்கு நாம் செல்வதற்கான சூழல் உருவாகும். சாதாரண மனிதர்களுக்கு சோகத்தையும் பயத்தையும்  மட்டுமே வரவழைக்கும் இடம் அது. அதுவும் அங்கு உபயோகிக்கும் கெமிக்கல்களின் வாடையும், இறந்து போன உடல்களிலிருந்து வர ஆரம்பிக்கும் வாடையும் ஒன்றாக சேர்ந்து… அப்பப்பா.. நினைத்தாலே ஒரு மாதிரி இருக்கிறது.

பிணவறையில் வேலை செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்கு அது பழகியிருக்கும் என்றாலும், அங்கு வேலை பார்க்க ஒரு அசாத்திய தைரியம் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. ஒரு பேய் படம் பார்த்தாலே இரவில் நமக்கு தூக்கம் வர மறுக்கிறது. இருட்டில் தனியாகச் செல்ல அள்ளு கிளப்புகிறது. அப்படியிருக்க, ப்ரேதங்களையும், ப்ரேதப் பரிசோதனைகளையும் தினமும் பார்க்கும் இவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.

சரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு நான்கைந்து பேர் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு வீட்டின் basement இல், பாதி புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது.  அந்தப் பெண்ணிற்கும் அந்த வீட்டில் இறந்து கிடப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதைக்கப்பட்டிருக்கும் பெண் யார் என்றும் தெரியவில்லை. உடலில் எந்த வித காயங்களோ கீரல்களோ எதுவும் இல்லை.

மறுநாள் காலை பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில், இந்தப் பெண்ணின் மரணத்தைப் பற்றி கண்டறிய போலீஸ் இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களை அணுகி விடிவதற்குள் ப்ரேதப் பரிசோதனை அறிக்கை தேவை என கேட்கின்றனர்.
தந்தையும், மகனுமான இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை ப்ரேதப் ப்ரிசோதனைக்கு உட்படுத்த, ஒவ்வொரு சோதனையும் அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

யார் அந்தப் பெண்? எப்படி மரணமடைந்தாள் என்பதை கொஞ்சம் அமானுஷ்யங்களையும் கலந்து, த்ரில்லிங்காகக் காட்டியிருக்கும் படம் தான் The Autopsy of Jane Doe.

ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் basement இல் இந்த தந்தை , மகன் இருவரும் தங்களது ப்ரேதப் பரிசோதனை கூடத்தை வைத்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். கைவசம் எப்பொழுதும் மூன்று நான்கு ப்ரேதங்கள் பரிசோதனைக்காக  ஃப்ரீசரில் இருக்கிறது.

ஒரு முறை மகனின் காதலி, பிணங்களைப் பார்க்க ஆசைப்பட்டு ஃப்ரீசரைத் திறக்க, மூகமே இல்லாத ஒரு பிணம்.. அதன் காலில் ஒரு மணி கட்டியிருக்கிறது. எதற்காக இறந்தவர் காலில் மணி கட்டியிருக்கிறீர்கள் என அந்தப் பெண் கேட்க, “பழங்காலத்தில் ஒருவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா அல்லது இறந்ததுபோல் கோமா நிலையில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க அவற்றின் காலில் மணியைக் கட்டுவது வழக்கம். ஒரு வேளை உயிர் இருந்து கால் ஆடும் பட்சத்தில் அந்த சத்தத்தை வைத்து அவருக்கு உயிர் இருக்கிறது என கண்டுபிடித்துவிடலாம். நான் இன்னும் அந்த பழங்கால முறையைப் பின்பற்றி வருகிறேன்” என்கிறார்.

எப்படி இறந்தாள் என்றே தெரியாத பெண்… முகமே இல்லாத பிணம்.. அதன் காலில் மணி… பின்னால் என்ன நடக்கும் என யூகிக்க முடிகிறதல்லவா? மிகக் குறைந்த கேரக்டர்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு நல்ல த்ரில்லர். என்சாய்…!


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...மேலும் வாசிக்க


எழுத்துப் படிகள் - 196 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3)  தனுஷ் கதாநாயகனாக நடித்தது.    எழுத்துப் படிகள் - 196  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பட்டாக்கத்தி பைரவன்                

2.    அவன் ஒரு சரித்திரம்        

3.    குருதட்சணை             

4.    வணங்காமுடி           

5.    தில்லானா மோகனாம்பாள்           

6.    நீதிபதி   
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஒ ரு நடிகரை கண்டித்து மாநிலம் முழுக்க பந்த் அறிவிப்பு. எனக்குத் ...மேலும் வாசிக்க
ரு நடிகரை கண்டித்து மாநிலம் முழுக்க பந்த் அறிவிப்பு. எனக்குத் தெரிந்து, ஒரு நடிகருக்காக, அவர் பத்தாண்டுகளுக்கு முன் பேசிய பேச்சுக்காக மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த வகையில் ரஜினிகாந்த், கமலஹாசன், இந்தி(ய) திரையுலகில் அமிதாப் பச்சன், ஷாருக் + சல்மான் + அமீர் கான்கள்... ஏன், உலகளவில் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர், சில்வஸ்டர் ஸ்டாலன், ஜாக்கி சான் என்று எந்தவொரு நடிகரும் அடையாத அதிகபட்ச புகழை அடைந்திருக்கிறார் தமிழ் சினிமா நடிகர் சத்யராஜ். வாட்டாளுக்கு நன்றிகள்!
மேலும் படிக்க »

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46 ...மேலும் வாசிக்க

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. எதிரி எவரோ கடைசியில் மரித்தது தலையெழுத்து (2)

6. பாசக்களத்தில் சிக்கியிருக்கும் மாற்றாளான மனைவி (6)

7. நாட்டியக்காரி நல்லவள்; வியாபாரம் செய்பவள். ஆனால் திறமையானவள் அல்ல (5)

8, 10 குறு: பண்ணையார் மகன் ஆளுகைக்குட்பட்ட சிறிய நிலப்பகுதி (3,3)

10. 8 குறு. பார்க்கவும்

12. கொளத்தூர் எல்லைகளில் திரிந்த மகப்பேரற்றவள் மெலிந்த தேகம் கொண்ட இளம்பெண் (5)

15. தாய்வழி உறவில் முறைப்பொண்ணு (3,3)

16. விடுமுறைக்கு ஷில்லாங் செல்வதில் மிக உற்சாகம் (2)


நெடுக்காக:


1. உயிர் விட்டுவிட்டு துதிப்பவர் தலைவர் (4)

2. இரு ஸ்வரங்கள் திருப்பித் தர சொன்னவன் கடைசியில் ஒரு சக்கரவர்த்தி (5)

3. முருகநூல் பாதி பாடியதில் பெருமை (3)

4. ஆதித்யன் ஆரம்பத்தில் திறமை இல்லாதவன். ஆனாலும் அனைத்தும் அறிந்தவன் (4)

9. நான்காம் மாதம் ஆறாம் நாள் அம்மனுக்கு ஒரு திருநாள் (5)

11. மீள முடியாத துயரத்தில் மகான் ஒரு மாலுமி ஆனார். (4)

13. அவதாரப் புதல்வர் இரட்டையர்? (4)

14. தலைநகரத்து தேன் எங்களுடையது (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


18-04-2017 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ...மேலும் வாசிக்க
18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இது இவரது 89-வது தயாரிப்பாகும். நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது.
படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் கேத்தரின் தெரஸா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி, எத்திராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார், இசை – யுவன்சங்கர் ராஜா, படத் தொகுப்பு – தேவ், கலை – A.R.மோகன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – யுகபாரதி, நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, இணைத் தயாரிப்பு – B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, தயாரிப்பு  – ஆர்.பி.சௌத்ரி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராகவா.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கடம்பவனம் என்னும் மலைக் கிராம்ம்தான் படத்தின் கதைக் களம். அங்கே வாழும் மண்ணின் மைந்தனான ஆர்யா எதற்கும் பயப்படாத ஆனால் மண் மணம் மாறாத, பாசம் கொண்ட மனிதன்.
அதே ஊரில் வசிக்கும் ராஜசிம்மனின் தங்கையான கேத்தரின், ஆர்யாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். முதலில் இதனை ஏற்காக ஆர்யா பின்பு தனக்கும் ஒரு துணை வேண்டுமே என்பதற்காக கேத்தரினின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் பிரபலமான கார்ப்பரேட் நிறுவனமான ஒரு சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தயாரிப்புக்கான தாதுப் பொருள்கள் இயற்கையாக எங்கே கிடைக்கிறது என்பதை தேடுகிறது. அவர்களது பார்வையில் இந்தக் கடம்ப வனம் கிராமம் சிக்குகிறது.
அங்கேயுள்ள மக்கள் மொத்த பேரையும் மலையில் இருந்து கீழே இறக்கிவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் இயற்கை வளங்களை அள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார் சிமெண்ட் நிறுவனத்தின் அதிபரான ராணா.
அந்தப் பகுதி வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்.. அரசு அதிகாரிகள் என்று அனைவருமே அந்த கார்ப்பரேட் நிறுவனம் அள்ளி வீசும் காசுக்காக அடிபணிந்து போக.. மலைவாழ் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேற மறுக்கிறார்கள். அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். பலிக்கவில்லை. வேறு வழியில்லாமல் சூழ்ச்சியால் மக்களை வெல்ல நினைக்கிறார் தீப்ராஜ் ராணா.
ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி இருவரையும் சமூக சேவகர்கள் என்ற போர்வையில் கடம்பவனத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் வந்து கிராம மக்களை மூளை சலவை செய்கிறார்கள். மலையடிவார ஊருக்கு மக்களை அழைத்து வந்து அங்கேயிருக்கும் சொகுசு வாழ்க்கையை அவர்களுக்குக் காட்டி “இதேபோன்ற வாழ்க்கையை நீங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது…” என்று தூபம் போடுகிறார்கள்.
ஆனால் கடைசி நேரத்தில் முழித்துக் கொள்ளும் ஆர்யா, இது பற்றி தனது மக்களுக்கு எடுத்துரைக்க.. ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தியின் சூழ்ச்சி தோல்வியடைகிறது. இதையடுத்து காவல்துறையை வைத்து அடக்குமுறையை ஏவுகிறார்கள். இதனால் அந்தக் கிராமத்து மக்கள் பெரிதும் பாதிப்படைய.. சிலர் இறந்தும் போகிறார்கள்.
அந்த ஒரே இரவில் அந்த ஊர் மக்கள் துரத்தப்பட்டு.. அவர்களது இருப்பிடங்கள் இடிக்கப்பட்டு, குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு.. ஊரே துடைத்து எடுக்கப்படுகிறது. மறுநாளே கனிம வளங்களை தோண்டியெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது.
தாக்குதலினால் மக்களை பிரிந்து அல்லாடும் ஆர்யா.. சில நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தையும், மக்களையும் சந்திக்கிறார். திரும்பவும் தனது ஊரான கடம்பவனத்தை எப்பாடுபட்டாவது தான் கைப்பற்றுவேன் என்கிறார். இதனை எப்படி அவர் சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் பிற்பாதியின் திரைக்கதை.
இதற்கு முன்பு திரைக்கு வந்த காடு சார்ந்த படங்களின் பாதிப்பு, இந்தப் படத்திலும் இருப்பதால் கதை எந்தவிதத்திலும் பார்வையாளனை கவரவில்லை என்பது இந்தப் படத்திற்கு நேர்ந்த சோகம்.
ஆர்யா மிகக் கடினமாக உழைத்திருக்கிறார். தனது முறுக்கேறிய உடல் வாகுக்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. படத்திலும் அதனை காட்டியிருக்கிறார். தேனெடுக்க அத்தனை உச்சியில் இருந்து கீழே குதித்து, அபாயகரமான ஷாட்டுகளிலும் நடித்திருக்கிறார்.
சண்டை காட்சிகள் அனைத்துமே ரியலிஸமாக இருப்பதை போலவே படமாக்கியிருப்பதால் ஆர்யாவின் பங்களிப்பு இதில் அதிகம்தான். இத்தனை செய்தும் எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகிவிட்டதுதான் கொடுமையான விஷயம்.
கேத்தரின் தெரசா இந்தப் படத்தில் தான் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டோம் என்பதே தெரியாமல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து யோசித்துக் கொண்டிருந்ததாக ஆர்யா பேசியிருந்தார். ஆனால் கேத்தரினுக்கு இதுவொரு நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
படம் முழுக்க செருப்புகூட அணியாமல் அந்தக் காட்டுப் பகுதியில் ஓடியாடி நடித்திருக்கிறார். இவருடைய முதல் அறிமுக ஷாட்டே அழகு. ஒளிப்பதிவாளரின் திறமையினால் கேத்தரினை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அப்படி காட்டியிருக்கிறார்கள். ஆனால் நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயம் இருப்பதை மறந்துவிட்டதால், அந்தக் காட்டுவாசி பெண்ணாக அவரை நினைக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
சாதாரணமான தரையில் இருக்கும் மனிதர்கள் பற்றிய படங்களில் இருக்கும் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சை மூட நாகரிகம் இன்னமும் தொடாத இந்த மக்களிடத்திலும் இருக்கிறது என்பது காட்டியிருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆர்யாவை காதலிப்பதாகச் சொல்லி விரட்டும் கேத்தரினின் திரைக்கதை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
முருகதாஸ், ஜானகி குடும்பக் கதை ஏற்கெனவே ‘புலி முருகன்’ என்ற மலையாளப் படத்தில் வந்த கதை. அதில் லால் அனாசயம் செய்திருப்பார். இதிலும் அந்தக் கதையை அப்படியே வைத்திருக்கிறார்கள். சிந்தனை திறன் கோ இன்சிடென்ட்ஸ் போலிருக்கிறது.
மற்றபடி மூப்பனாக நடித்த சூப்பர் சுப்பராயன், கேத்தரினின் அண்ணனாக நடித்த ராஜசிம்மன், அம்மாவாக நடித்த எலிசபெத், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி அருண் என்று பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ராஜசிம்மனின் கடைசி கட்ட பல்டி எதிர்பாராதது.
இத்தனை மெகா பட்ஜெட் படத்திற்கேற்றபடியான தொழில் நுட்பக் கலைஞர்களும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் அழகான ஒளிப்பதிவுதான் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் ஆறுதலான விஷயம்.
முதல் காட்சியிலேயே ஆர்யா தேனெடுக்க அந்த மலையுச்சியில் இருந்து கீழே குதிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்த காட்சிகளுமே படத்தின் பிரம்மாண்டத்தை சொல்லாமல் சொல்லிவிட்டன. அழகான கிராமத்து குடியிருப்புகள்.. நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டம், கேத்தரினின் அழகு.. பாடல் காட்சிகளை படமாக்கியவிதம்.. இறுதியான சண்டை காட்சிகளை படமாக்கிய கஷ்டம்.. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாருக்கு மிகப் பெரிய ரோஜா பூ மாலையை காணிக்கையாக்க வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள் ஸார்..
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஒத்த பார்வையில்’ கேட்கவும், பார்க்கவும் சிறப்பு. ‘உச்சிமலை அழகு’ காடுகளின் அழகையும், கிராம மக்களின் வாழ்க்கையையும் காட்டியது. ‘சாமக் கோடங்கி’ தூங்கி வழிந்து கொண்டிருந்த ரசிகர்களைத் தட்டியெழுப்பி பார்க்க வைத்தது. ‘ஆகாத காலம்’ சோகத்தைப் பிழிந்தெடுத்த்து. ‘இளரத்தம் சூடேற’ அடுத்தது என்ன என்பதற்கான ‘ஹிப்’பை ஏற்றிவிட்டது.. ஆனால் பின்னணி இசையில்தான் காதைக் கிழித்துவிட்டார் யுவன்.
படத் தொகுப்பாளர் கொஞ்சம் கருணை வைத்து கிளைமாக்ஸில் கை வைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இத்தனை நீண்ட பரபரப்பான சண்டை காட்சியில் யதார்த்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருந்ததால், அதனை குறைவுபடுத்தியிருந்தால் கொஞ்சம் நிறைவாகவே இருந்திருக்கும்..!
இத்தனை நடிகர், நடிகைகளையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கஷ்டப்படுத்தி எடுத்திருக்கும் இந்தப் படம், அதற்கான முழு தகுதியுடைய கதையுடன் வெளிவரவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.
முந்தைய ஷாட்வரையிலும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யா, ஒரேயொரு விஷயத்தைக் கேட்டவுடன் பட்டென்று பொங்கியெழுந்து “எங்க ஊரை நாங்களே காப்பாத்திக்கிறோம்…” என்று போர்க்குரல் கொடுப்பதெல்லாம் திரைக்கதையின் ஓட்டையைத்தான் காண்பிக்கிறது.
இந்த மண்ணைவிட்டு அகல மாட்டோம் என்று கிராம மக்கள் சொல்வதையும், இதற்காக வில்லன் அனுப்பி வைக்கும் ஆட்கள் செய்யும் ரவுடித்தனத்தையும் சரியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டிய இயக்குநர் கோட்டைவிட்டிருப்பது வருத்தப்படக் கூடிய விஷயம்.
அந்தக் காட்டுக்குள் வில்லன்கள் கையில் மெஷின் கன்னோடு வந்து நிற்பதை பார்த்த மாத்திரத்திலேயே தியேட்டரில் சிரிப்பலைகள் எழும்புகின்றன, இயக்குநர் எத்தனை வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் என்று..!? ஹீரோ ஆர்யா எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறாரே.. அவராவது அட்வைஸ் செய்திருக்கக் கூடாதா..? கிளைமாக்ஸே சொதப்பலாகியிருப்பதால் படம் எந்தவொரு பாதிப்பையும் ரசிகனுக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.
“நிரம்பப் கஷ்டப்பட்டு தாய்லாந்துவரையிலும் சென்று கிளைமாக்ஸில் 100 யானைகளை வைத்து படமாக்கினோம்…” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்கள். ஆனால் அந்த அளவுக்கான காட்சிகள் படத்தில் இல்லை என்பது அதிர்ச்சியான விஷயம். 100 யானைகள் கொண்ட பிரம்மாண்டத்தை படத்தில் எதிர்பார்த்து காத்திருந்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. இதை சி.ஜி.யிலேயே செய்திருக்கலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
படத்திற்கு அதிக செலவு செய்வது முக்கியமல்ல. எந்தக் கதைக்காக செய்கிறோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இனிமேல் ஆர்யா இதனைக் கவனித்தில் கொண்டு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்..!
கடம்பன் – பெருத்த ஏமாற்றம்..!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


18-04-2017 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ...மேலும் வாசிக்க
18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் தனுஷ் தானே தயாரித்து, இயக்குநராகவும், நடிகராகவும் களமிறங்கும் இந்த  ‘ப.பாண்டி’ படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார்.
இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டியனும், நட்புக்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – தனுஷ், ஒளிப்பதிவு – ரா.வேல்ராஜ், இசை – ஷான் ரோல்டான், பாடல்கள் – தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா, நடனம் – பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – சில்வா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மது. 

சினிமாவில் சண்டை பயிற்சியாளராகப் பணியாற்றி தற்போது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் ராஜ்கிரண் தனது மகன் பிரசன்னா, மருமகள் சாயாசிங் மற்றும் பேரன், பேத்தியுடன் இருக்கிறார்.
தினப்பொழுதுக்கு ஓய்வில் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அந்த ஏரியாவில் மிகப் பிரபலமானவராகவும் இருக்கிறார். ஏதாவது தவறுகள் நடந்தால் உடனேயே தட்டிக் கேட்கும் தைரியம் மிக்கவராகவும் இருக்கிறார்.
ஆனால் இவரது மகன் பிரசன்னா தான் உண்டு தன் வேலையுண்டு என்றே இருக்க நினைக்கிறார். தலைமுறை இடைவெளியும் இதனுடன் சேர்ந்து கொள்ள.. அப்பனுக்கும், மகனுக்கும் இடையில் எப்போதும் ஒரு பனிப்போர்.
ஏரியாவில் கஞ்சா விற்பவர்களை பற்றி போலீஸில் புகார் கொடுக்கிறார் ராஜ்கிரண். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த கான்ஸ்டபிள்கள் பிரசன்னாவை மிரட்ட.. ராஜ்கிரணை கடிந்து கொள்கிறார் பிரசன்னா. மகனின் பேச்சுக்காக ஸ்டேஷனுக்குச் சென்று தனது புகார் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.
இதற்கிடையில் ராஜ்கிரணுக்கு ஒரு திரைப்படத்தில் சண்டை காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் சக்ஸ்ஸ்புல்லாக நடித்துக் காட்டுகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டூடியோவில் தனக்குக் கிடைத்த மரியாதையை நினைத்து பூரிப்போடு வீடு திரும்புவரின் கண்ணில் மறுபடியும் அந்த கஞ்சா பார்ட்டிகள் சிக்கிவிட.. அவர்களை தூக்கிப் போட்டு மிதித்துவிடுகிறார்.
இந்தக் கேஸ் போலீஸுக்கு போக.. பிரசன்னா அப்பாவை எதிர்த்து கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார். இதனால் வேதனைப்படும் ராஜ்கிரண், சட்டென எழுந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கண் போன போக்கில் போனவர் ஒரு இடத்தில் தன் வயதையொத்த நபர்களின் கூட்டத்தை பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவர்கள் அவரது வாழ்க்கைக் கதையை கேட்கிறார்கள். தன்னுடைய முதல் காதலை பற்றி அவர்களிடத்தில் சொல்கிறார் ராஜ்கிரண்.
“இப்போ அவளை பார்க்கத்தான் போறியா..?” என்று ஒருவர் கேட்க.. “இதுவரைக்கும் அந்த எண்ணம் இல்லை. இப்போ வந்திருச்சு..” என்கிறார் ராஜ்கிரண். முகநூல் மூலமாக அவரது காதலியைத் தேடிக் கண்டுபிடிக்கும் அந்தக் கூட்டம், அவருடைய காதலி ஹைதராபாத்தில் இருப்பதாகச்  சொல்கிறார். உடனேயே அவரைத் தேடி ஹைதராபாத்திற்கு தனது பைக்கிலேயே பறக்கிறார் ராஜ்கிரண்.
இன்னொரு பக்கம் அப்பாவை காணாமல் பிரசன்னா பதறுகிறார். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். நாலாபுறமும் தேடி வருகிறார். இந்த இக்கட்டில் ராஜ்கிரண் ஹைதராபாத்தில் தனது காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா..? என்ன ஆனது..? திரும்பவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாரா என்பதுதான் இந்தச் சுவையான திரைப்படத்தின் கதை.
இப்படியொரு குடும்பக் கதையை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது..? தனுஷ் தனது முதல் கதையை இப்படி தேர்வு செய்வார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதோடு இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் கதாபாத்திரங்களின் தேர்வுக்காகவே தனுஷை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஆளுமை தன்மையுடனும், பாசத்துடனும், நேசத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டிய ஒரு தகப்பனாக ராஜ்கிரணின் நடிப்பு அற்புதம்.. தனது பேரன், பேத்திகளின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய சூழல்.. பையனிடம் திட்டுவாங்கிவிட்டு பேரப் பிள்ளைகளிடம் அதற்காக பல்பு வாங்குவது.. பக்கத்து வீட்டு பையனுக்கு முதல் நாள் அட்வைஸ் செய்து, மறுநாள் அவனுடனேயே அமர்ந்து தண்ணியடிக்கும் காட்சியில் கொஞ்சம் காமெடியையும் சேர்த்தே தந்திருக்கிறார்.
தன்னை நோக்கிப் பாய்ந்த வார்த்தைத் தோட்டாக்களை தேக்கி வைத்திருந்து, ஒரு நாள் பிரசன்னாவிடம் திருப்பித் தரும் காட்சியில் ராஜ்கிரண் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். தனுஷிடம் இப்படியொரு இயக்கத் திறமையை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு முதல் அச்சாரத்தை இந்த ஒரு காட்சியே விதைத்தது என்றால் அது மிகையில்லை.
ரேவதியை முதன்முதலில் பார்த்தவுடன் அவர் காட்டும் பரவசம்.. ரேவதியின் தொடுதலில் ஏற்படும் கிளர்ச்சி.. பேச்சில் காட்டும் நெருக்கத்தால் ஏற்படும் மன நிம்மதி.. விசாரிப்பில் விளையும் அன்பும், பாசமும்.. இப்படி அனைத்தையும் அந்த ஒரு பாடல் காட்சியிலேயே காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
தனது மனைவியின் இழப்பை நினைக்காதவரையும் நினைக்க வைக்கும் அளவுக்கான சம்பவங்கள் வீட்டில் நடந்துவிட அதை நினைத்து வருந்துகிறவரை சமாதானப்படுத்தும் பேரன், பேத்திகளிடம் அவர் பேசும்விதமும், நடந்து கொள்ளும்விதமும் ஒரு சாதாரண தாத்தாவைத்தான் காட்டுகிறது.
இறுதியில் ரேவதியிடம் பிரியாவிடை பெற்றுவிட்டு திரும்பிப் பார்க்காமலேயே ஒரு குறியீடாக டாட்டா காட்டிவிட்டு செல்கின்ற உடல் மொழியிலும்கூட ஒரு சபாஷ் போட வைத்திருக்கிறார் ராஜ்கிரண்.
ரேவதியை பார்த்து மிக நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த வயதுக்கேற்ற பக்குவமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். ராஜ்கிரணை பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் ஒரு ஜெர்க்கை முகத்தில் காட்டும் அந்த நொடியில் ரேவதியை அனைவருக்குமே பிடித்துவிடுகிறது.
இறுதியில் தன்னிடமிருந்த ராஜ்கிரணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துவிட்டு,  தான் எழுதிய கடைசியான காதல் கடித்த்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் காட்சி ஒரு காதல் கவிதை. அந்தக் கவிதையிலேயே ஒரு கவிதையாய் நிற்கிறார் ரேவதி.
சின்ன வயது ராஜ்கிரண் கேரக்டர்களில் வரும் தனுஷும், மடோனா செபாஸ்டியனும் சரியான தேர்வு. மடோனாவுக்கு நம்ம ஊர் பொண்ணு கேரக்டர் சற்றே ஒத்து வரவில்லை என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனுஷுக்காகவே சண்டை காட்சியை வைத்திருந்தாலும் அது திணிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
அந்தக் கிராமத்து போர்ஷனை வழவழவென இழுக்காமல் ரத்தினச் சுருக்கமாக அதே சமயம் அழகாக சுருக்கியிருக்கிறார்கள். கடைசியில் தன்னிடம் வரும் மடோனாவின் தம்பியைத் தூக்கிக் கொள்ளும் தனுஷின் செயலிலேயே அவருடைய பரிதவிப்பு தெரிகிறது. ஏ கிளாஸ் நடிப்புய்யா..!
பிரசன்னாவுக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். தந்தையைப் பற்றியே தான் எண்ணவில்லை என்பதை புரிந்து கொண்டு கடைசியாக குமுறி அழும் அந்த அப்பாவியின் நிலைமையில்தான் இன்றைக்கு பாதி இளைஞர்கள் நாட்டில் உள்ளனர். இந்தக் கேரக்டர் இல்லாத தெருக்களும், ஊர்களும் இந்தியாவிலேயே இருக்க முடியாது. மிகச் சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச் இது.
மற்றும் மடோனாவின் அப்பாவாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், லொட லொட வாயுடன் தனுஷின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் வித்யுத்லேகா, திவ்யதர்ஷிணி என்று இந்தக் கோஷ்டியும் சிறப்பாகவே தங்களது கேரக்டரை செய்திருக்கிறார்கள்.
இதேபோல் இவரது மனைவியாக நடித்திருக்கும் சாயா சிங், பேரன் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தைகளுடன் பக்கத்து வீட்டுப் பையனாக நடித்திருப்பவன்கூட தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
இடையில் ஒரேயொரு காட்சியென்றாலும் கெளதம் வாசுதேவ் மேனனும், ரோபோ சங்கரும் கலக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இயக்குநருக்கான பாதி சுமைகளை ஒளிப்பதிவாளரே தூக்கி சுமந்திருப்பது தெரிகிறது. எப்போதும்போல இந்தப் படத்திலும் ஒரேயொரு காட்சியில் தலையைக் காட்டி படம் ஹிட்டாக தானும் ஒரு காரணமாகியிருக்கிறார் வேல்ராஜ்.
ஷான் ரோல்டனின் இசையில் ‘வெண் பனி மலரே’ பாடல் ஓகே.. அதேபோல் தனுஷ்-மடோனாவின் ‘பார்த்தேன்’ மெலடியான காதல் பாடலும் கேட்க இனிமை. இதைவிட பின்னணி இசையில் அடக்கி வாசித்து, சில இடங்களில் மெளனித்து படத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
தனுஷின் இயக்கத் திறமையுடன், திரைக்கதை அமைத்திருக்கும் பாங்கும் சேர்ந்து அவரை இன்னொரு சகலகலாவல்லவராக காட்டுகிறது.
ராஜ்கிரண் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்துவிட்டு மிகப் பெருமையாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் அந்த கஞ்சா பார்ட்டிகளுடன் சண்டைக்கு போகிறார். அது அப்போதைய அவரது மனநிலையைக் காட்டுகிறது. இவ்வளவு யதார்த்தமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் தனுஷ்.
அப்பாவித்தனத்தோடு “என்ன இத்தனை வயசாகியும்.. ஒரு முடி கூட நரைக்கலை..?” என்று கேட்க. “அங்க மட்டும் என்ன வாழுதாம்..?” என்ற ரேவதியின் கேள்விக்கு.. “சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்காக…” என்று பதில் சொல்ல.. “சால்ட் இருக்கு.. பெப்பர் எங்க..?” என்று ரேவதியின் அடுத்தக் கேள்விக்கு அசடு வழிவதுமாக வசனத்தாலேயே காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
அந்த ஒரே நாளிலேயே ராஜ்கிரணுடன் ஊர் சுற்றும் ரேவதி மிக எளிதாக அவருடன் நெருங்கிப் பழகுவதும், தன்னுடைய மகள், பேத்தி வீட்டில் காத்திருப்பதை எளிதாகச் சொல்லிவிட்டு போக.. சட்டென்று அதை ஏற்காத ஆண் மனம் பேதலித்துப் போய் இருப்பதை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
“நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கள்ல.. போ.. போய் சீக்கிரமா தூங்கு…” என்று மகள் திவ்யதர்ஷினி சொல்லிவிட்டுப் போனவுடன் ரேவதி தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து ஸ்டைலாக இரண்டு ஸ்டெப்புகள் வைத்துவிட்டு மீண்டும் நடக்கிறார் பாருங்கள். அங்கேயிருக்கிறது இயக்குநரின் இயக்கத் திறமை.. வெல்டன் தனுஷ்..!
“என் மனசுல நீ இப்பவும் இருக்கியா?” என்ற ஒற்றைக் கேள்வியைப் பிடித்துக் கொண்டு நள்ளிரவிலும் ரேவதியின் வீட்டுக்கு வந்து கேட்பதும்.. அதைத் தொடர்ந்து நடக்கும் வார்த்தை விளையாட்டுக்களில் படத்தை மிக, மிக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
இறுதியில் இருவருமே தங்களிடமிருக்கும் அந்த ரகசிய ஆயுதத்தை பரிமாறிக் கொண்டு நட்புக்கு அச்சாரம் போட்டு, உறவுக்கு ‘தடா’ போடுவதை போல வைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிதான் படத்தின் மிகப் பெரிய ஹைலைட்.
படம் பார்த்த அனைவருக்குமே பிடித்தமான காட்சியாகவும், படத்தின் கதைக்கும், இக்காலத்திய சமூகச் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கொஞ்சம் தப்பினாலும் அது மறுமணம் விஷயத்தில் தவறாகிவிடும் என்பதுபோல் இருந்தாலும், “அது தேவையில்லை.. இப்போது போலவே இருப்போம்.. தவறுக்கு வருந்தி வந்து நிற்கும் மகனை புறந்தள்ள அப்பனுக்கு மனமில்லை. ஒரு குடும்பம் மறுபடியும் சேர்ந்திருக்கும் நேரத்தில் அதைப் பிரிக்க தனக்கும் விருப்பமில்லை என்று ரேவதியின் ஒதுங்கலுமான திரைக்கதை அமைப்புகள்தான் படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள்..!
படத்தின் ஒரேயொரு மைனஸ்.. ஹைதராபாத் மாலில் நடக்கும் சண்டை காட்சிதான். அது மட்டும்தான் வலிந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வை கொடுத்ததோடு இல்லாமல், இதற்கு ரேவதி கொடுக்கும் முன்னோட்டமும் தேவையற்றது என்றும் சொல்லத் தோன்றுகிறது.
வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. அதிலும் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் நடை பிணங்களாகத்தான் வாழ்வார்கள். இந்தியா போன்ற குடும்ப உறவு முறையை அதிகம் பேணும் சமூகத்தில் வயதானவர்கள் ஒதுக்கப்படுதலும், அடக்கப்படுதலும்தான் அவர்களால் அதிகம் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது.
வீட்டில் அவர்களுக்கென்று இருக்கும் உரிமைகள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய் கடைசியில் அவர்களே வீட்டுக்கு தேவையில்லாத ஒரு பண்டமாக கருதப்படும்போதுதான் தாங்கள் இத்தனை நாட்கள் பிள்ளைகளை வளர்த்தது எதற்கு என்று யோசிக்கிறார்கள். யோசித்த பின் எடுக்கும் விளைவுகள் இப்படி ராஜ்கிரண் செய்யும் செயலில் போய்தான் முடியும்..!
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்களின் குறைகளை கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றியிருக்கும். இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி..!
இயக்குநர் தனுஷுக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
ப.பாண்டி – அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பார்த்தது: யு டர்ன்( U TURN) - கன்னடம் ...மேலும் வாசிக்க
பார்த்தது:
யு டர்ன்( U TURN) - கன்னடம்ரொம்ப சிம்பிளான கதை.ஆனா படம் பார்க்க பார்க்க விறுவிறுப்பு. திரில்லர் வகையை சேர்ந்த ரகம்.எதார்த்தமான நடிப்பு, இயல்பான காட்சிகள் என ரசிக்க வைக்கிறது.திரைக்கதை சலிக்க வைக்காமல் அடுத்தடுத்து திருப்பங்களை தருகிறது.சாலை விதிமுறைகளை மீறும் நபரால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் பழிவாங்கல் கதை.கதாநாயகியை பார்த்தால் ஒரு சாயல்ல திவ்யா மாதிரி இருக்காங்க.பாடல்கள் இல்லாத படம்.


KILLING VEERAPPAN - கன்னடம்.

                       செம மொக்கையான படம்.படத்துல ஆனா ஊனா மியூசிக் பேக்ரவுண்ட்ல ம்யூட் ஆயிடறாங்க.சிவராஜ்குமார் எப்பபாரு ஏதோ ஒண்ணை குடிச்சிட்டே இருக்காரு.
ஸ்டைலாமாம்...விறுவிறுப்புன்னு மருந்துக்கு கூட இல்ல.வில்லனை பிடிக்கனும்னா ஹீரோ நல்ல வியூகத்தை காட்டி நம்மளை பரபரபாக்கனும்.ஆனா இதுல எல்லாமே செம மொக்கை.காட்டுல கதை நடக்குறதால் அப்பப்ப ரெண்டு மூணு யானை, ரெண்டு பாம்பை காட்டறாங்க அவ்ளோதான்.கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டிங்ஐ ஏற்படுத்தாத படம்.இதுல இயக்கம் ராம்கோபால்வர்மா..வாம்...நாசமா போச்சி..

பத்து வருசம் முன்னாடி அதர்மம் அப்படின்னு முரளி நடிச்ச படம் வந்தது.அப்பவே அந்த படம் பார்க்க செமயா இருக்கும்.அது எவ்ளோ மேல்.

நடந்தவை :
                              கோவை அண்ணாசிலை கொடிசியாவில் இருந்து காந்திபுரம் செல்ல ஓலா புக் பண்ணினேன்.கரெக்டா மூணு நிமிசத்துல என்னோட லொகேஷனுக்கு வண்டி வந்திடுச்சு.ட்ரைவர் கூப்பிடறதுக்கு முன்னாடியே நான் அவரோட நம்பர்க்கு ட்ரை பண்ணேன்.லைன் கிடைக்கல.ஆனா அவரு ஓலா நம்பரான சென்னை கோடுடன் கூடிய நம்பர்ல இருந்து கூப்பிட்டாங்க.நானும் பக்கத்தில தான் இருந்ததால் இருக்குற இடத்தை சொல்லி, வண்டியை கண்டுபிடிச்சு ஏறிட்டேன்.
OTP பாஸ்வேர்டு சொல்லவும் வண்டி கிளம்பியது.ஏறின இடத்தில் இருந்து காந்திபுரம் வரைக்கும் என்னோட போன்லயும், இன்னொரு ஜியோ போன்லயும் பேசிகிட்டே வந்தேன்.ஊர்ல இருந்து வந்திருக்கிற என் அம்மாவை ரிசீவ் பண்றதுக்காக, அவங்க இறங்க வேண்டிய இடம், மற்றும் அட்ரஸ் சொல்லிட்டு வந்தேன்.

ஐந்து நிமிசத்துக்குள் காந்திபுரம் மேம்பாலம் வந்துட்டோம்.அன்னபூர்ணா ஹோட்டல் முன்னாடி நிற்க சொல்லியிருந்த அம்மாவும், அண்ணனும் பக்கத்துல இருந்த ஆவின் டீக்கடையில் டீ குடிச்சிட்டு இருந்தாங்க.நான் எதுக்கு வண்டியோட வெயிட் பண்ணனும்னுட்டு வண்டி ட்ரிப்ஐ குளோஸ் பண்ண சொல்லிட்டேன்.பில் தொகை ஓலா மணியில் இருந்து ஆட்டோமேடிக்கா அமெளண்ட் கழிந்திடும்.நானும் அவசர கதியில் இறங்கிட்டேன்.
                       ஆவின் கடையில் நானும் ஒரு டீ சொல்லிட்டு அவங்ககூட பேசிட்டு இருந்தேன்.டீ குடிச்சு முடிச்சதும் மீண்டும் ஓலா புக் பண்ணேன்.வண்டி வந்துச்சு.ஏறி கவுண்டம்பாளையம் போகனும்னு சொல்றோம்.சரின்னு சொல்லிட்டு வண்டியை இடது பக்கம் ஓட்டிட்டு போறாரு..காந்திபுரம் சிக்னல்ல வண்டி நிக்குது.அப்போதான் பார்க்குறேன் என்னோட ஜியோ போனை காணோம்னு.அதுவரைக்கும் போன் இல்லாமல் இருப்பதை கவனிக்கல.யோசிச்சு பார்த்ததில் முன்ன வந்த வண்டியில் விட்டுட்டேன் என்கிற எண்ணம் வரவும், என் ஜியோ நம்பருக்கு டயல் பண்றேன்.போன் சுவிட்ச் ஆப்.எவனோ அமுத்திட்டான் என்கிற எண்ணம் உடனடி வந்து போனது.உடனே முன்னே வந்த ஓலா வண்டி ட்ரைவர்க்கு போன் அடிச்சேன்.அவரு கிட்ட என் போனை உங்க வண்டில மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லவும், அவரு உடனே ஆமாங்க இங்க தான் இருக்குன்னு சொல்லிட்டாரு (ஏதோ ஒரு ஞாபகத்தில் ). உடனே நான் ஏன் போன் சுவிட்ச் ஆப்ல இருக்குன்னு கேட்கவும்,நான்தான் போன்ஐ ஆப் பண்ணிட்டேன்னு சொல்றாரு.ஏன்னு கேட்டா கால் வரும்ல அதான் அப்படின்னு சொல்றாப்ல.ஏங்க, போனைத் தொலைச்சவன் போன் பண்ணி கேட்டா, கொடுக்குறதுக்கு ஈசியா இருக்கும்ல என கேட்டதுக்கு பதிலை காணோம்.உடனே எனக்கு செம கோபம்.இப்ப எங்க இருக்கீங்கன்னு கேட்க, சரவணம்பட்டி போயிட்டு இருக்கேன்னு சொல்ல, இருங்க, நான் வரேனு சொல்ல, காரில் கஸ்டமர் இருக்காருன்னு அவர் சொல்ல, நான் ஒரு ஆளை அனுப்பறேன் அவருகிட்ட மொபைல குடுங்கன்னு சொல்லவும் சரிங்கன்னு சொல்ல, கூட நான் ஏங்க, உங்க வண்டில கஸ்டமர் ஒரு பொருளை விட்டுட்டு போனா, அதை பத்திரமா எடுத்து தருவீங்கன்னு பார்த்தா, நீங்க போனை ஆஃப் பண்ணிட்டு எடுத்துகிட்டு போறீங்களே இது நல்லாவா இருக்கு என கேட்டு விட்டு, சரவணம்பட்டி செக்போஸ்ட் பக்கத்துல நம்ம ஆளு ஒருத்தரு இருக்காப்ல.உடனடியா அவருக்கு போன் போட்டு, ட்ரைவர் நம்பரும், வண்டி நம்பரும் கொடுத்து உடனே போன் பண்ணி மொபைலை வாங்குன்னு சொல்லவும், அவரு குரு அமுதாஸ் ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தி மொபைல வாங்கிட்டு எனக்கு போன் பண்ணாப்ல..அண்ணா..வாங்கிட்டேன் என சொல்லவும்.
மனம் திருப்தி அடைந்தது.
வண்டியில் தெரியாமல் விட்டுவிட்ட பொருளை திருப்பிக்கொடுப்பதை விட்டுவிட்டு, அபகரிக்க முயல்வது எவ்வகையில் நியாயம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சந்திரமுகி பட்த்துல ரஜினி ஜோதிகாகப் பத்தி ஒரு வசனம் சொல்லுவாரு. கங்கா ...மேலும் வாசிக்க
சந்திரமுகி பட்த்துல ரஜினி ஜோதிகாகப் பத்தி ஒரு வசனம் சொல்லுவாரு. கங்கா சந்திரமுகி அறைக்குப் போனா.. கங்கா சந்திரமுகியா நின்னா.. கங்கா சந்திரமுகியா நடந்தா.. கங்கா சந்திரமுகியாவே தன்னை நினைச்சிக்கிட்டான்னு. இந்த வசனம் ஜோதிகாவுக்கு பொருந்துச்சோ இல்லையோ… நம்ம பி.வாசு சாருக்குத்தான் கரெக்டா பொருந்துது. மனுசன் சந்திரமுகியாவே மாறிட்டாரு போல.. அத விட்டு வெளில வரவே மாட்டேங்குறாரு. கடந்த 12 வருசத்துல கிட்டதட்ட  நாலு சந்திரமுகி எடுத்துருக்காரு.

முதல்ல மலையாள மணிச்சித்ரதாள கன்னடத்துல விஷ்ணுவர்தன வச்சி ஆப்தமித்ரான்னு எடுத்தாரு. அது ஹிட்டான உடனே அத சந்திரமுகின்னு ரஜினிய வச்சி தமிழ்& தெலுகுல எடுத்து மெகா ஹிட்டாக்குனாரு. திரும்ப கன்னடத்துக்கே போயி ஆப்தமித்ராவோட சீக்குவல் ஆப்தரக்‌ஷகாவ எடுத்தாரு. படம் எடுத்து முடிச்சோன விஷ்ணுவர்த்தன் இறந்துட்டாரு. ச்ச… ச்ச… படம் பாத்ததாலயெல்லாம் அவரு சாகல… அந்தப் படம் பாத்தா நம்மதான் சாவோம். அந்த அளவுக்கு இருக்கும். இருந்தாலும் விஷ்ணுவர்தனோட கடைசிப் படம்ங்குறதாலா படம் பிச்சிக்கிட்டு ஓடுச்சி. அதே படத்த தமிழ்ல சந்திரமுகி-2ன்னு எடுக்க ரஜினிய அப்ரோச் பன்னி அது முடியாமப் போக, அதே கதைய தெலுகுல “நாகவல்லி”ங்குற பேர்ல வெங்கடேஷ், அனுஷ்காவ வச்சி எடுத்தாரு. அதாவது வெங்கடேஷ் அந்தப் பட்த்துல சந்திரமுகி சரவணனோட சிஷ்யானா வந்துருப்பாரு. சீக்குவல்னவுடே என்னென்னவோ நினைச்சிடாதீங்க. ஹீரோ ஹீரோயின மட்டும் மாத்திட்டு அதே கதைய அப்டியே திரும்ப எடுத்துருப்பாரு.

ஆக மொத்தம் P. வாசு கணக்குல நாலு சந்திரமுகி. இது இல்லாம அரண்மனைங்குற பேர்ல சுந்தர்.சி வேற ரெண்டு தடவ சந்திரமுகிய எடுத்துருக்காரு. அது வேற கணக்கு விடுங்க. இந்தப் பக்கம் நம்ம ராகவா லாரண்ஸ்.. கடந்த பத்து வருஷத்துல அவர் முனி மட்டும்தான் எடுத்துருக்காரு. அடுத்த பத்து வருஷத்துலயும் முனி மட்டும்தான் எடுப்பாரு போல. ஏன்னா இன்னும் முனி-4, முனி-5ன்னு நிறைய வரவேண்டியிருக்கு.

இப்ப இந்த பி.வாசு, ராகவா லாரண்ஸ் ங்குற ரெண்டு வெவ்வேறு மந்தையில் இருந்த ஆடுகள் ஒண்ணா சந்திச்ச போது ஏற்பட்ட அசம்பாவிதம்தான் இந்த சிவலிங்கா. படம் முழுக்க சந்திரமுகியும், முனியும்தான் மாத்தி மாத்தி ஓடுது. க்ளைமாக்ஸ்ல பி.வாசு இயக்கத்துல கவுண்டரும் சத்யராஜூம் இணைந்து நடிச்சி மெகா ஹிட்டான மலபார் போலீஸ் படத்தோட க்ளைமாக்ஸ் சீன அப்டியே எடுத்து சேத்துக்கிட்டுருக்காங்க. அவ்ளோதான். ஏற்கனவே பி.வாசுக்கு நாலு சந்திரமுகி. இப்ப சிவலிங்கா ஒண்ணு அஞ்சி. சிவலிங்காவே கன்னட சிவலிங்கா படத்தோட ரீமேக்தான். ஆக மொத்தம் ஆறு… ச்சியேர்ஸ்.. ச்சை.. நமக்கே கண்ணக்கட்டுது.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் நம்ம வடிவேலு. ரொம்ப நாளுக்கு அப்புறம் அவரோட காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. நமக்கெல்லாம் புடிச்ச பழைய வடிவேலுவா செமையா சிரிக்க வச்சிருக்காரு. ஒரு நாலஞ்சி சீன் தான் வர்றாரு. ஆனா வந்த சீனெல்லாம் செம காமெடி. எப்புடி திருடுனேன்னு ஊர்வசிக்கிட்ட சொல்லிக்காட்டுற சீன் தாறு மாறு.

அடுத்து ராகவா லாரன்ஸ்.. ஆளு சூப்பரா இருக்காரு. நல்லா டான்ஸ் ஆடுறாரு. ஆனா என்ன ரொம்ப அதிகப் பிரசங்கித் தனம் பன்றாரு. முனி-1 ல பேயப்  பாத்து பயப்புடுவேன்னு ஆரம்பிச்சி இன்னும் அதே ரம்பத்தப் போட்டுக்கிட்டு இருக்காரு. எப்ப நிறுத்தப்போறாருன்னு தெரியல.

போன படத்துல “மக்கள் சூப்பர் ஸ்டார்”ன்னு போட்டு எல்லார்கிட்டயும் நல்லா வலுவா வாங்கிக் கட்டிக்கிட்டாரு. இதுல என்னன்னு பாத்தா அவரு பேரு சிவ லிங்கேஸ்வரன்… அதுலயும் படத்துல அடிக்கடி ”இந்த லிங்கா… சிவலிங்கேஸ்வரன் இத செய்யாம விடமாட்டன்…. லிங்கா இத கண்டுபிடிக்காம விடமாட்டான்” ன்றாராப்ள.. இன்னும் உச்சக்கட்டம் இண்ட்ரோ சாங்கு. இவரு சின்னக் கபாலியாம்… பல பேரு ரஜினி பேர சொல்லாம சூப்பர்  ஸ்டாருன்னு போட்டுக்குறானுங்க… இவரு ரஜினி படத்த ஸ்க்ரீன்ல காமிச்சிட்டு நாந்தான் அடுத்த ரஜினின்னு சொல்லிக்கிறாரு. மத்தபடி அவய்ங்களுக்கும் இவருக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சின்னக் கபாலி சொல்லிக்கிட்டு திரிஞ்சி சின்னப் பகவதி மாதிரி எவன்கிட்டயாவது மாத்து வாங்குனாதான் தெளியிவாரு போல.

பி.வாசுவோட பையன் ஒரு ரோல் பன்னிருக்காரு. அந்த ரோலுக்கு கரெக்ட்டா மேட்ச் ஆயிருக்காரு. நல்லா நடிக்கவும் செஞ்சிருக்காரு. தமன் பாட்டெல்லாம் கேக்குற மாதிரிதான் போட்டுருக்காரு. பின்ணனி இசைதான் கொஞ்சம் இறைச்சல்.

மைனஸ் அப்டின்னு சொல்லனும்னா எக்கச்சக்கமா சொல்லலாம். மொதல்ல ஏற்கனவே பலதடவ பாத்து பழக்கப்பட்ட அதே கதை திரைக்கதை. இந்தப் படத்த ஒரு பேய் படமா இல்லாம ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் டைப் படமா எடுத்துருந்தா மலபார் போலீஸ் மாதிரி நல்ல  படமா வந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும்.

அடுத்து ரித்திகா சிங்…சந்திரமுகில ஜோதிகா பன்ன ரோல பன்னிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு நடிக்கவும் வரல.. அந்த ரோலுக்கு செட்டும் ஆகல.. மேக்கப்பும் சரியில்லை… ஸ்க்ரீன்ல வந்து எதோ பன்னிட்டு இருக்கு. ஊர்வசியும் அதே தான்…

இன்னொரு கொடுமையான விஷயம் மேக்கப். சமீப காலத்துல இவ்வளவு மோசமான மேக்கப்ப படங்கள்ல பாத்த்தே இல்லை. கரகாட்டம் ஆடுறப்போ மூஞ்சி ஃபுல்லா ரோஸ் பவுட நல்லா அள்ளி அப்பி, அடிக்கிற கலர்ல ஒரு லிப் ஸ்டிக் போட்டுக்கிட்டு இருப்பாங்களே… அதே மாதிரிதான் இருக்கு இதுல ரித்திகா சிங், ஊர்வசி.. பனுப்பிரியா எல்லாரோட மூஞ்சும். மூஞ்சில சுண்ணாம்ப விட்டு அப்பி விட்டமாதிரி. அதுவும் இந்தப் படத்துல போட்டுருக்க லிப் ஸ்டிக் கலரெல்லாம் நா தெலுங்குப் படத்துல கூட பாத்தில்லை. படத்த கலர்ஃபுல்லா காமிக்கிறதுக்காக முயற்சி செஞ்சி படம் ஃபுல்லா ஒரே ஊதா கலரு… அதுவும் அடிக்கிற கலரு.. யப்பா… மிடில.

இன்னொரு பெரிய கடுப்பு என்னன்னா படத்துல வர்ற கேரக்டர்கள் நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருக்காங்க.. ஒவ்வொருத்தரோட வாய்ஸ் intensity யும் பயங்கர அதிகம். காது கொய்யிங்குது. இவங்க சும்மா இருந்தாலும் தமன் விட மாட்ராப்ள.. எதாவது ஒரு மீசிக்க போட்டு காத கிழிச்சி விடுறாப்ள..  படத்துல ஒரு pleasant டான சீன் கூட இல்லை. நல்ல வேளை கோவை சரளா படத்துல இல்லையேன்னு இறைவனுக்கு நன்றிய தெரிவிச்சிக்கிட்டேன். பாக்குற ஐடியா இருந்தா நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டல பாருங்க.


மொத்ததுல வடிவேலு ஒருத்தருக்காக வேணா ஒருதடவ போய்ப் பாக்கலாம். மத்தபடி சிறப்பா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லை. 


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


17-04-2017 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ...மேலும் வாசிக்க
17-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாச்சலம் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி, சக்திவாசு, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ், வி.டி.வி.கணேஷ், மதுவந்தி அருண், மதுமிதா, பரத் கல்யாண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஊர்வசி லாரன்சின் அம்மாவாகவும், கதாநாயகி ரித்திகா சிங்கின் அம்மாவாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்.
இயக்கம் – பி.வாசு, தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன், ஒளிப்பதிவு – சர்வேஷ் முராரி, இசை – எஸ்.எஸ்.தமன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், பாடல்கள் – விவேகா, நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – அனல் அரசு, தளபதி தினேஷ், மாஸ் மாதா, சிகை அலங்காரம் – ஏ.சப்தகிரிவாசன், புகைப்படம் – பி.ஜெயராமன், விஷுவல் எபெக்ட்ஸ் – இளங்கோ, சுபீஷ், சிறப்பு சப்தம் – சி.சேது, டிடிஎஸ் வல்லுநர் – கிருஷ்ணமூர்த்தி, டிஸைனர் – பவன் குமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோடா கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.என்.அஷ்ரப், டி.எஸ்.செல்வராஜ், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எஸ்.பழனியப்பன், ஆர்.விக்ரமன், இணை தயாரிப்பு – ஜெ.அப்துல் லத்தீப்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றும் சிவலிங்கேஸ்வரன் என்னும் ராகவா லாரன்ஸ் மிக நேர்மையானவர். ஆம்புலன்ஸில் கோடி, கோடியாய் பணத்தைத் திருட்டுத்தனமாக கடத்துவதை கண்டுபிடிப்பவர், அவர்கள் கொடுக்க முன் வரும் ‘பிப்டி பிப்டி ஷேர்’ என்கிற விஷயத்தைக்கூட ஏற்றுக் கொள்ளாமல் திருட்டுக் கும்பலை ஒட்டு மொத்தமாய் உள்ளே தூக்கி போடுகிறார்.
இவரிடத்தில் ஒரு வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. ரஹீம் என்னும் சக்தி வாசு ஒரு நாள் இரவில் ரயிலில் பயணம் செய்யும்போது திடீரென்று ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு ஒரே சாட்சி ரஹீம் வளர்த்து வந்த சாரா என்னும் புறாதான். ஆனால் இந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடிய அளவுக்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் தற்கொலை என்று வழக்கை மூடுகிறது காவல்துறை.
ரஹீமை காதலித்து கல்யாணத்திற்காக காத்திருந்த அவருடைய காதலி, போலீஸ் கமிஷனரிடம் இது பற்றி புகார் செய்ய.. கேஸ் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுகிறது. இப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்துதான் இந்த வழக்கு சிவலிங்காவின் கைக்கு வருகிறது.
இப்போது சிவலிங்கா பெண் பார்க்கப் போய் பெண்ணை மிகவும் பிடித்துப் போய் அவசரமாக கல்யாணமும் செய்துவிடுகிறார். அவருடைய மனைவியான ரித்திகா சிங் பேய்ப் படங்களை பார்த்து அலறுவதையே ஒரு திரில்லிங்காக செய்யக் கூடியவர்.
ரஹீம் கொலை விசாரணைக்காக வேலூர் வரும் ராகவா லாரன்ஸ், ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் தனது புதிய மனைவியுடன் குடியேறுகிறார். வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். முதல் சந்தேகம் ரஹீமின் காதலியின் அப்பா மீது பாய்கிறது. ஆனால் அவரோ “தான் எதுவும் செய்யவில்லை என்றும், மகளிடம் சொல்லி காதலை கத்தரிக்க நினைத்தேன். ஆனால் கடைசியில் ரஹீமின் நல்ல குணத்தைப் பார்த்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன்…” என்கிறார்.
விசாரணை மேலும் தீவிரமாகும்போது ரஹீமின் ஆவி ரித்திகாவின் உடலில் புகுந்து கொண்டு அவரை ஆட்டிப் படைக்கிறது. ரித்திகா திடீர், திடீரென்று வேறு வேறு மாதிரியாய் நடந்து கொள்வதை பார்த்து பயந்து போன ராகவா லாரன்ஸ் மனைவியை மருத்துவரிடம் அழைத்து வருகிறார். அப்படியும் சிக்கல் தீராமல் போக தர்ஹாவுக்கு மந்திரிக்க அழைத்து வருகிறார்.
அங்கேதான் அவளது உடம்பில் ஏறியிருப்பது ரஹீம் என்பது தெரிய வருகிறது. ரஹீமின் ஆவியோ ‘என்னைக் கொலை செய்தவன் யார்..? அவன் எதற்காக என்னைக் கொலை செய்தான் என்பது எனக்குத் தெரிய வேண்டும். சீக்கிரம் கண்டு பிடி. காரணம் தெரியாமல் நான் ரித்திகாவின் உடம்பில் இருந்து வெளியேற மாட்டேன்..’ என்கிறது.
இப்போது ராகவா லாரன்ஸுக்கு உடனடியாக இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. துப்பு துலக்கினாரா..? யார் குற்றவாளி.. எதற்காக ரஹீமை கொலை செய்தார் என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் அண்ட்  திரில்லர் படத்தின் திரைக்கதை.
‘சந்திரமுகி’, ‘காஞ்சனா’ டைப்பில் இந்த இரண்டு படங்களையும் இணைத்தது போன்ற கதையில் அதே பாணியில் இயக்கி வெற்றிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.வாசு.
சிவா என்னும் சிவலிங்கேஸ்வரனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வழக்கம்போலவே அற்புதமாக நடனடமாடியிருக்கிறார். தனக்குத் தெரிந்தவரையிலும் நடித்திருக்கிறார். பேயைக் கண்டால் பயப்படும் தனது டிரேட் மார்க் நடிப்பையும் காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.
இடையிடையே உடல் ஊனமுற்றவர்களுக்கு தானே ஆபத்பாந்தவன் என்றும், ரஜினிக்கு பின்பு தான்தான் என்பதை மறைமுகமாகச் சொல்லும்விதமாகவும் ‘சின்ன கபாலி’ என்றும் படத்திற்கு விளம்பரம் செய்வதை போலவும் காட்சிகளை வைத்து அதையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தாய்ப் பாசத்தை காட்டும்விதத்தில் “பெத்த அம்மாவ விட்டுட்டு எவனெல்லாம் தனியா போறேனோ, அவனெல்லாம் என் பார்வையில் ஒரு பொணம்டா…” என்கிறார். இன்னொரு இடத்தில் “தப்பு பண்ற ஒவ்வொருத்தனுக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு இடத்துல ஆப்பு வைப்பான்…” என்று பன்ச் வசனம் பேசி அடிக்கிறார். அதேபோல் பேயை பார்த்து பயப்படும் காட்சியில் “என் தலைவனுக்கு பாம்புன்னா பயம்; எனக்கு பேய்னா பயம்…” என்கிறார்.
இவருக்கு நடிப்புக்கான ஸ்கோப்பே கிளைமாக்ஸ் காட்சியில்தான் கிடைக்கிறது. அதிலும் ரஹீமின் ஆவியை தன் உடம்பில் இறக்கிக் கொண்டு அவர் ஆடும் ஆட்டமும், அதற்கேற்ற பின்னணி இசையும், காட்சியமைப்பும் ஒத்துழைப்பு தர.. ராகவா லாரன்ஸை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.
‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங்கா இது என்று கேட்க வைத்திருக்கிறார். நிஜத்தில் இவர் ஒரு குத்துச் சண்டை வீராங்கனை. நடனமே தெரியாது என்றுதான் திரையுலகப் பயணத்தின் துவக்கத்தில் சொன்னார். ஆனால் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் இவர் ஆடியிருக்கும் ஆட்டம்.. அசத்தல்.. அதிலும் ‘ரங்கு ரக்கர’ பாடலில் ஆடியிருக்கும் ஆட்டத்தை லட்சுமி ராய் பார்த்தால் நிச்சயமாக கோபப்படுவார். அந்த அளவுக்கு லாரன்ஸுடன் ரொமான்ஸில் பின்னிப் பிணைந்திருக்கிறார்.
லாரன்ஸ் பெண் பார்க்க வந்த இடத்தில் பட்டென்று அவரே பேசத் துவங்கி.. “என்னை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்….” என்று இயல்பை மாற்றிப் போட்டு நடிப்பைத் துவக்கி.. ரஹீமின் பேய் அவருடைய உடம்பில் புகுந்தவுடன் அவர் காட்டும் ஆக்சன்கள் அத்தனையும் அசத்தல் ரகம். ‘சந்திரமுகி’ ஜோதிகாவை இந்த இடத்தில் நிஜமாகவே நினைவுபடுத்த வைத்திருக்கிறார் ரித்திகா சிங். அந்த பேயின் கொடூர முகத்துக்கான மேக்கப்புடன், நடிப்பையும் விட்டுவிடாமல் அழகாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள் ரித்திகா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பட்டுக் குஞ்சமாக’ அவதாரமெடுத்திருக்கும் நடிகர் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். டென்ஷனை குறைக்க வைத்திருக்கிறார். இவரும், ஊர்வசியும் இருக்கும் காட்சிகளில் நடிப்பும், வசனமும் பின்னிப் பிடலெடுக்கிறது. ‘வடிவேலு இஸ் பேக் டூ தி பார்ம்’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.
“பொண்ணு முகத்தை பார்க்காம கல்யாணம் பண்றவங்க அவங்க; நெருப்புக்கு முன்னாடி கல்யாணம் பண்றவங்க நாம…” என்று அடக்கமாக மகளின் மனதை மாற்ற முயலும் ராதாரவியும் நடிப்பில் கவர்கிறார். “ஒரு பேய்க்கும், பேக்குக்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்….” என்று புலம்பும் ‘அறுசுவை அன்னலட்சுமி’ ஊர்வசியும் கலகலப்பையும் ஊட்டி, ரசிக்கவும் வைத்திருக்கிறார்.
வெகு நாட்களுக்குப் பிறகு பானுப்பிரியா. அலட்டல் இல்லாமல் அமைதியாக ரித்திகாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். மேலும் ரஹீமாக நடித்திருக்கும் சக்திவாசுவுக்கு நிஜமாகவே இந்தப் படம் ஒரு முக்கியமான படம்தான். பேய் வடிவத்தில் இவர் காட்டியிருக்கும் நடிப்புக்காக மிகப் பெரிய பாராட்டை இவருக்கு வழங்கலாம்.
சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த பலம்தான். இடையிடையே சி.ஜி., கிராபிக்ஸ் உதவியுடன் ஒளி கூட்டல்கள் இருக்கின்ற என்றாலும் அதுவும் படத்தை கலர்புல்லாகவே காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ரம்மியம் என்று சொல்லலாம். லொகேஷன்களை பார்த்து, பார்த்து செலக்ஷன் செய்திருப்பதால் இதுவும் ஒளிப்பதிவுக்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.
படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் தன் வேலையை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கும்..!
பேய் பங்களா.. பங்களாவுக்கு பின்பக்கம் சுடுகாடு.. வீட்டின் உள் அமைப்பு.. என்று பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கலை இயக்குநர் ஜி.துரைராஜ். பாராட்டுக்குரியவர்.
இப்போது பழைய இயக்குநர்களெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டார்கள் என்றெல்லாம் யார், யாரோ பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்கத்தை பார்த்துவிட்டு யாரும் அப்படி சொல்லிவிட முடியாது. பி.வாசுவின் இயக்கத் திறமைக்கு இந்தப் படம் ஒரு பெரிய சான்று.
ரித்திகாவுக்கும், ரஹீமுக்குமான தொடர்பு.. அந்தக் கதையின் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம், தொடரும் இடம்.. அது முடிவுக்கு வரும் இடம்.. என்று அனைத்தையும் பார்த்து, பார்த்து எழுதியிருக்கிறார் இயக்குநர் வாசு. படத்திலேயே எதிர்பாராத கதை இதுதான். வெல்டன் ஸார்..!
அதேபோல் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அதிகாரி என்றுதான் அனைவரும் சொல்கிறார்களே தவிர.. ராகவா லாரன்ஸ் அங்கே என்ன பதவியில் இருக்கிறார் என்பதை உயரதிகாரியான மதுவந்தி அருண்கூட சொல்லவில்லை என்பதுதான் சோகம்.
அதேபோல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்கொலை என்று தீர்ப்பாகிவிட்ட நிலையில் மீண்டும் இதனை திறப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்கிற விதிகளெல்லாம் இருக்கே..!? அதையெல்லாம் கேட்காமல், எந்தவிதமான காரணமும் இல்லாமல் பட்டென்று ஒரு போலீஸ் கமிஷனர் தன்னிடம் வந்த புகாரையடுத்து வழக்கை ரீ-ஓப்பன் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே சொல்லலாம்.
அதேபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து அவர்கள் முன்பாக விசாரித்து உண்மையை வரவழைக்க வேண்டிய தேவை என்ன இருக்கறது என்று தெரியவில்லை.
ஆனால் புதுமையான கிளைமாக்ஸுக்காக இயக்குநர் வாசு செய்திருக்கும் இந்த திரைக்கதையும் சுவையாகத்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் இதனையும் ஏற்றுக் கொள்வோம்.
ஒரு கிரைம் – மர்டர் – சஸ்பென்ஸ் – திரில்லர் – கதையில் பேயையும் இணைத்து பேய்க் கதையாகவும் மாற்றி, அதையும் தனது சிறப்பான இயக்கத்தால் வெற்றிகரமாக இயக்கிக் காட்டியிருக்கும் இயக்குநர் பி.வாசுவுக்கு நமது பாராட்டுக்கள்..!
சிவலிங்கா – பார்க்க வேண்டிய படம்தான்.. இதில் சந்தேகமேயில்லை..!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தோழர் ஞாட்பன் சிவாவின் பரிந்துரையின் பேரில் சமீபத்தில் ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தேன். ஃபவாத் கானின் இயக்கத்தில் 2015-ல் வெளிவந்த ’தர்ம் சங்கட் மே’ என்கிற ...மேலும் வாசிக்க

தோழர் ஞாட்பன் சிவாவின் பரிந்துரையின் பேரில் சமீபத்தில் ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தேன். ஃபவாத் கானின் இயக்கத்தில் 2015-ல் வெளிவந்த ’தர்ம் சங்கட் மே’ என்கிற ஒரு ஹிந்தி திரைப்படம். காது ஜவ்வுகளைக் கிழிக்கும்படியான கதாநாயகனின் இரைச்சல் சத்தங்களோ, லாஜிக்கே இல்லாத பஞ்ச் வசனங்களோ, சண்டைகளோ இல்லாமல் ஒரு சினிமா எப்படி இயல்பானதாக, நமக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது இந்தப் படம். ஒரு குழந்தையின் பெற்றோரின் மதமே வலுக்கட்டாயமாக அந்தக் குழந்தையின் மீது திணிக்கப்படுகிறது. […]

The post தர்ம் சங்கட் மெய்ன் – திரை விமர்சனம் . . . . . . appeared first on மாற்று.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல்காட்சி கார்கள் துரத்தி செல்லும் காட்சிகள்,  பனிச்சருக்கு , ஸ்கூட்டர் சேஸிங் ...மேலும் வாசிக்க

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல்காட்சி கார்கள் துரத்தி செல்லும் காட்சிகள்,  பனிச்சருக்கு , ஸ்கூட்டர் சேஸிங் காட்சிகள் என அசத்தலாக இருக்கும். அதே போல கடம்பன் படத்தில்  ஆர்யா தேன் எடுக்கும் காட்சி பிரமிப்பாக இருக்கி றது. மதுரையின் பல பெயர்களில் ஒன்ரு கடம்பவனம்.  வைகை நதிக்க ரையில் கடம்ப மரங்கள் அதிகமாக இருந்ததால் கடம்பவனம் என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள். அந்த பெயரில் இருக்கிற ஒரு மலைகிராமத்தில் நடக்கிற கதை.

  ஆர்யா கைதேர்ந்த வேட்டைக்காரனாகவும், துணிச்சல்காரனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இதே கூட்டத்தை சேர்ந்த நாயகி கேத்தரின் தெரசா, ஆர்யா மீது காதல் வலை வீசுகிறார்.
ஆனால், ஆர்யாவோ, கேத்தரின் தெரசாவின் அண்ணன் ராஜசிம்மனுக்கும் தனக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால் கேத்தரின் தெரசாவை முதலில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பின்னர் ஒருகட்டத்தில் கேத்தரின் மீது ஆர்யாவும் காதல் வயப்படுகிறார்.
இந்நிலையில், இவர்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான தாதுப் பொருட்கள் பூமிக்கடியில் புதைந்து கிடப்பதாக அறியும் சிமெண்ட் கம்பெனி உரிமையாளர் தீப்ராஜ் ராணா, மலைவாழ் மக்களை அங்கிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த நினைக்கிறார். அடித்து விரட்டினால், அது அரசாங்கத்துக்கு தெரிந்து பெரிய விஷயமாகிவிடும் என்பதால், தந்திரமாக செயல்பட நினைக்கிறார்.
அதன்படி, சமூக சேவைகள் செய்துவரும் ஒய்.ஜி.மகேந்திரனையும், அவரது மகளையும் கடம்பவனம் மலைக்கிராமத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு நல்லது செய்வதுபோல் நடித்து, அங்கிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில், இந்த திட்டம் ஆர்யா மற்றும் மலைவாழ் மக்களுக்கு தெரியவர, அவர்களை எதிர்த்து நிற்க துணிகிறார்கள்.
இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கஷ்டங்களுக்கெல்லாம் இந்தப் படம் தகுதியானதா? ஆர்யா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் முழுக்க உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவரது உடல்வாகை பார்க்கும்போதே பிரமிக்க வைக்கிறது. அதேபோல், செருப்பே அணியாமல் மரம், செடி, கொடிகள் இடையே பாய்ந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைக்கிறார்.
கேத்தரின் தெரசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மலைவாழ் மக்களின் வலியை தனது நடிப்பால் அழகாக பிரதி பலித்திருக்கிறார். அவரைது அண்ணாக வரும் ராஜசிம்மன் பார்வையாலேயே மிரட்டுகிறார். முதலில் ஆர்யாவுக்கு எதிரியாகவும், பிறகு அவருக்கு உதவி செய்வதுமாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆர்யாவின் அப்பாவாக வரும் சூப்பர் சுப்ராய், மூப்பன் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சிமெண்ட் கம்பெனி அதிபராக வரும் தீப்ராஜ் ராணா, கார்ப்பரேட் வில்லனாக வந்து ரசிக்க வைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
இருப்பிடத்தையும் வாழ்வாதாரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் மலைவாழ் மக்களின் போராட்டத்தை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவா. ஆனால், அவர் சொல்ல வந்த கருத்து, மலைவாழ் மக்களின் வலி, படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது வருத்தம். இப்படத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது. ஆனால், அந்த கஷ்டங்களு க்கெல்லாம் இந்தப் படம் தகுதியானதா? என்பது சந்தேகம்தான்.
யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சதீஷ் குமாரின் கேமரா காட்டுக்குள் புகுந்து விளையாடியிருக்கிறது.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுதஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரைவிமர்சனம்
The Autopsy Of Jane Doe!!!


முத்துசிவா
இலை - சினிமா விமர்சனம்


உண்மைத்தமிழன்சினிமா : கவண்


பரிவை சே.குமார்
 
குறும்படம்